சென்னையில் கால் பதிக்கும்.. ஸ்வீடிஷ் ஜாம்பவான்.. இனி பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டாம்.. சூப்பர்
சென்னை: ஸ்வீடிஷ் பர்னிச்சர் ஜாம்பவான் நிறுவனமான ஐகியா சென்னையில் விரைவில் முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தனது அடுத்தகட்ட முதலீட்டுத் திட்டங்களை ஐகியா அறிவிக்கத் தயாராகி வருகிறது. சென்னை மற்றும் புனேவில் புதிய பெரிய அளவிலான கடைகளும், தொடர்ந்து சிறிய நகரக் கடைகளும் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து ஐகியா இந்தியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரி பேட்ரிக் அன்டோனி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊடகங்களிடம் பேசுகையில், "விரிவாக்கத் திட்டங்களும் முதலீட்டுத் தொகையும் அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படும்" என்றார். ஐகியாவின் முதன்மை நிறுவனமான இன்கா குழுமம், குருகிராம் மற்றும் நொய்டாவில் இன்கா மையங்களை உருவாக்க ₹7,500 கோடிக்கு மேல் முதலீடு செய்கிறது. இவ்விரு மையங்களும் அலுவலக, சில்லறை வர்த்தக இடங்கள் மற்றும் ஒரு ஐகியா கடையைக் கொண்டிருக்கும். குருகிராம் மையம் 2026-லும், நொய்டா மையம் 2028-லும் திறக்கப்படும்.

சென்னை முதலீடு
சென்னையில் இந்த நிறுவனம் விரைவில் முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் விரைவில் முதலீடு செய்வதற்காக இந்த நிறுவனம் நிலம் தேடி வருகிறது. மெட்ரோ வசதி உள்ள இடங்களில் இவர்கள் நிலம் தேடி வருகிறார்கள். 4-5 ஏக்கரில் இவர்கள் நிலம் தேடி வருகிறார்கள். இல்லையென்றால் ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் குறைந்தது 3000 சதுர அடி கொண்ட கட்டிடம் தேவை.
ஏற்கனவே இந்த நிறுவனம் பெங்களூர் , ஹைதராபாத்தில் உள்ளது. டெல்லியின் தாகூர் கார்டனில் உள்ள பசிபிக் மாலில் அமைந்துள்ள ஐகியாவின் புதிய விற்பனை நிலையம், 15,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு 2,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 800 பொருட்களை உடனடியாக வாங்க முடியும். நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஐகியா தனது முதல் 'திட்டமிட்டு ஆர்டர் செய்யும் மையத்தை' (Plan & Order Point - PaOP) பெங்களூருவில் திறந்தது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளையும் அறைகளையும் திட்டமிடுவதற்கு நிபுணர் ஆலோசனையைப் பெறலாம்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பேட்ரிக் அன்டோனி, பொருளாதார வளர்ச்சி, மக்கள்தொகை ஈவுத்தொகை மற்றும் நுகர்வோர் வர்க்கத்தில் நுழையும் இளம் குடும்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் முதலீடுகளை செய்து வருகிறது. அடுத்த மூன்று பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் ஐகியாவுக்கு அபார வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். நிறுவனம் தனது சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்காக, உள்ளூர் கொள்முதல் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னை பணிகள்
அன்டோனியின் பேட்டியில், ஐகியா தற்போது இந்தியாவில் தனது இரண்டாம் கட்ட வளர்ச்சியில் உள்ளது. பெரிய அளவிலான கடைகளுடனும், சிறிய நகர விற்பனை நிலையங்களுடனும் ஆன்லைன் வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் பன்முக சேனல் அணுகுமுறையை இது பின்பற்றுகிறது. தற்போது, நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 30 சதவீதம் ஆன்லைன் விற்பனையின் மூலம் ஈட்டப்படுகிறது., என்றுள்ளார்.
சென்னையில் இந்த நிறுவனம் விரைவில் முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் விரைவில் முதலீடு செய்வதற்காக இந்த நிறுவனம் நிலம் தேடி வருகிறது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications