Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி.. 7 பேர் சிக்கினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ரங்க நாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அம்பேத்கர் சமூக நலச்சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்துள்ளார். இவர் விசிக பிரமுகர் ஆவார்.

கடந்த 25 ஆம் தேதி இரவு சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் தனது நண்பருடன் பேசி கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 7 கொண்ட கும்பல் ஒன்று இளங்கோவனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

சேத்துப்பட்டு போலீஸ்

சேத்துப்பட்டு போலீஸ்

இந்த கொலை தொடர்பாக சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சேத்துப்பட்டு போலீசார் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரபு, தமிழா, குஜ்ஜி ராகேஷ், ஆகாஷ், விஜய், மூர்த்தி, டேனி ராஜ், ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கொலையாளிகள் ஆயுதங்களுடன் தப்பி செல்லும் காட்சியும் இளங்கோவனை கொல்ல துரத்தும் காட்சியும் பதிவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெல்டிங் கடை

வெல்டிங் கடை

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சேத்துப்பட்டு பகுதியில் குமரவேல் என்பவர் வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு எதிரே ரமேஷ் என்பவர் டீக்கடை நடத்தி வந்த நிலையில் குமரவேல் வெல்டிங் கடையில் இருந்து இரும்பு தூசு மற்றும் துகள்கள் டீக்கடையில் பரவி வந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குமரவேலுக்கு ஆதரவாக சஞ்சய் பிரபுவும், ரமேஷிற்கு ஆதரவாக இளங்கோவனும் களத்தில் இறங்கினர்.

மோதல்

மோதல்

இதனையடுத்து சஞ்சய் பிரபு ஆதரவாளருக்கும், இளங்கோவன் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீண்ட மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சஞ்சய் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இளங்கோவனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

கைது செய்யப்பட்ட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அதனையும் மீறி கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+