அசத்தல்.. இனி தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை.. உன்னத திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை : தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Recommended Video
30 ஆயிரம் பேருக்கு ஓர் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் 2 சுகாதார மையங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனை தவிர்க்க ஏற்கனவே இல்லம் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் உள்ளது.

நடமாடும் மருத்துவ சேவை
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் வகையில், நடமாடும் மருத்துவ சேவை திட்டம் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

மருத்துவ பணியாளர்கள்
இந்த திட்டம் மூலம் தொலைதூரங்களில் உள்ள மக்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு களப் பணியாளர், ஒரு மருந்தாளுநர் என 4 பேர் கிராமங்களுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் சேவை
மேலும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகளும் இந்த நடமாடும் மருத்துவமனையில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் 389 வாகனங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், சென்னை மெரீனா சாலையில் அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவமனை சேவை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications