சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிஎஃப் தடை.. தமிழ்நாடு அரசும் பின்பற்றனும்! முதல்வர் மீது மக்கள் சந்தேகம் - கிளப்பிவிடும் எச்.ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் மீது மக்கள் சந்தேகப்படுவதாகவும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்து இருக்கிறார்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.

அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

பிஎஃப்ஐ மட்டுமல்ல.. மொத்தம் “9” - கேம்பஸ் ஃப்ரண்ட், NCHRO, இமாம் கவுன்சில் அமைப்புகளுக்கும் தடை பிஎஃப்ஐ மட்டுமல்ல.. மொத்தம் “9” - கேம்பஸ் ஃப்ரண்ட், NCHRO, இமாம் கவுன்சில் அமைப்புகளுக்கும் தடை

என்.ஐ.ஏ. சோதனை

என்.ஐ.ஏ. சோதனை

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

2 வது ரெய்டு

2 வது ரெய்டு

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

பிஎஃப்ஐக்கு தடை

பிஎஃப்ஐக்கு தடை

நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

துணை அமைப்பு

துணை அமைப்பு

இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எச்.ராஜா ட்வீட்

எச்.ராஜா ட்வீட்

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, "தமிழ்நாடு அரசும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்காததால் அவர் மீது மக்கள் சந்தேகப்படுகிறார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP H Raja tweet on PFI ban. He said that, "The TN Government has to follow this in letter and spirit. The people of the state has got doubt since the CM Stalin is yet to condemn their acts of terror and violence."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X