கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகம்.. நவம்பர் 1 முதல் புதிய மாற்றம்.. இந்து அறநிலையத்துறை முக்கிய உத்தரவு
சென்னை : கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரவு செலவு கணக்கு அறிக்கையில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம்இருந்து மீட்கப்பட்டு வருகிறது. கோயில்கள் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டையும் திமுக அரசு எடுத்துள்ளது. மேலும் கோயில்களின் சொத்துக்கள் விவரம் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் பல்வேறு கோயில்களை புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோயில் ஊழியர்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோயில்களில் அர்ச்சனை
இந்நிலையில் கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய திட்டம் வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கட்டண சீட்டுகள்
இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் இதர சேவைகளுக்கு கட்டணச் சீட்டுகள் நடைமுறையில் உள்ளன. இந்த கட்டணசேவைகளுக்கு பக்தர்கள் செலுத்தும் தொகைக்கு முறையாக கட்டண சீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்கிற புகார்கள் வரப் பெறுகிறது.

கட்டண சீட்டுகள்
இதனை தவிர்க்கும் பொருட்டு. கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சேவைகளுக்குமான கட்டணச்சீட்டு களை கணினி வழியில் வழங்கி முறைப்படுத்துதல் அவசியமாகிறது. தற்போது, கோயில்களில் நடைமுறையில் உள்ள அனைத்து விதமான சேவைகளுக்குரிய கட்டணச்சீட்டுகளை அக்டோபர் 3ம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம். நவம்பர் 1ம் தேதி முதல் கோயிலில் உள்ள அனைத்து கட்டண சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

கோயில் ஊழியர்கள்
இதற்காக ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கோயில் வலைதளத்தின் மூலமாகவும், கோயிலில் உள்ள கவுன்டரிலும் கணினி வழி கட்டணச் சீட்டு வழங்க தேவையான மென்பொருள் நிக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில்களில் மேற்கொள்ள அனைத்து கோயில் அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயில்கள்
ஒவ்வொரு கோயிலும் தங்களது கோயிலில் வழங்கப்படும் கட்டண சேவைகளை இணையதளத்தில் பதிவிட்டு அதற்கான அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் குறிப்பிட வேண்டும். என்ஐசி எனப்படும் நிக்கில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளினை தவிர தனியார் நிறுவனங்களின் மென்பொருளினை நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு பயன்படுத்தக்கூடாது.
Recommended Video

என்ன சொல்கிறது
கணினி வழி கட்டணச் சீட்டு வழங்கும் பணியை நவம்பர் 1ம் தேதி மூலம் அனைத்து கோயில்களிலும் செயல்படுத்த தயார் நிலையில் இருக்கும்படி மண்டல இணை ஆணை யர்கள், மாவட்ட உதவி ஆணையர்கள் கண்கா ணித்து அக்டோபர் 25ம் தேதிக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications