இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பரபர அறிவிப்பு
சென்னை: ‛‛இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது. ஆனால் மொழி திணிப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒருவர் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை'' என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறினார்.
2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மே 13 முதல் 15 வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் சிந்தனையாளர் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். கட்சியின் செயல்பாடு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கேஎஸ் அழகிரி பேட்டி
இதேபோல் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனையாளர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்தனர். இதுதொடர்பாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2 நாள் சிந்தனை அமர்வு மாநாடு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை(ஜூன் 6), நாளை மறுநாள் (ஜூன்7 ) என மொத்தம் 2 நாட்கள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சிந்தனை அமர்வு மன்றம் நடைபெற உள்ளது. தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டம், பொருளாதாரம் பற்றியும், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

நடைமுறைப்படுத்துவது இல்லை
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம் திருக்குறள், பாரதியாரின் வரிகளை மேடையில் சொல்கிறார். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்துக்கு காங்கிரஸ் கட்சி தான் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது. தற்போது 8 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படவில்லை.

இந்தி எதிர்ப்பில் பங்கேற்பு இல்லை
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது. ஆனால் மொழி திணிப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒருவர் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஹஜ் பயணிகள் தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதை மத்திய பாஜக அரசு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications