பாதி பேர் ’தாடி’ வச்சுருக்கான்! மேடையில் பேசிய ராதாரவி! மோடியும் வச்சிருக்கார்..குறுக்கே வந்த பேரரசு
சென்னை : சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் பாஜக பிரமுகருமான ராதாரவி முக்கால்வாசி பேர் தாடிதான் வச்சிருக்கிறான் என ஒருமையில் பேசிய நிலையில் பிரதமர் மோடியும் அண்ணாமலையும் கூட தாடி தான் வைத்திருக்கிறார்கள் என இயக்குனர் பேரரசு பதில் அளித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனும் பிரபல நடிகருமான ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார்.
மேடையில் பேசினாலும் சரி பொது இடங்களில் பேசினாலும் சரி எப்போதும் அதிரடியாகவும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஒருமையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் ராதா ரவி.

நடிகர் ராதாரவி
பாஜகவில் சேர்ந்தாலும் தனது அதிரடி பேச்சுகளை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை. அப்படி ஒரு பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பாஜகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி என்னதான் பேசினார் ராதாரவி என விசாரித்த போது சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டில் என்ற திரைப்படத்தில் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடைபெற்றிருக்கிறது.

தாடி
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாக்கியராஜ், பேரரசு, ராஜ்கபூர், தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தனது வழக்கமான பாணியிலேயே அவன் இவன் என பலரையும் ஒருமையில் பேசிய ராதாரவி அண்ணன் பாக்கியராஜ் வெள்ளைத்தாடியுடன் வந்திருக்கிறார்.

தாடியோடு திரிகிறார்
என்ன ஏதுன்னு தெரியல முக்கால்வாசி பேர் தாடி வச்சிருக்கான்! இப்ப எவனப் பார்த்தாலும் தாடியோட தான் திரிகிறான் என போட்டு தாக்கினார். இதை அடுத்து பேச வந்த இயக்குனர் பேரரசு 'வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்வதே அண்ணன் ராதாரவிக்கு வேலையாக இருக்கிறது. தாடியை பற்றி பேசுகிறார். பிரதமர் மோடியும் தாடி வச்சிருக்காரு. பாஜக தலைவர் அண்ணாமலை கூட கொஞ்ச நாள் தாடி வைத்திருந்தார் இவர்களைப் பற்றி பேச வேண்டியதுதானே என பதிலடியாக கொடுத்தார்.

இயக்குனர் பேரரசு
தற்போது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ராதாரவியாவது பொதுவாக தான் பேசினார். ஆனால் பேரரசு இப்படி பிரதமரையும் அண்ணாமலையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் எனக் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராதாரவி அமித்ஷாவை அக்யூஸ்ட் என பேசியது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது தாடியை பற்றி பேசி இருப்பதும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications