கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி? நகை அடகு வைத்தவர்களுக்கு ஜாக்பாட்? ரூ. 10 லட்சம் வரை லோன்?
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் தேர்தல் நேரத் தள்ளுபடி அறிவிப்புகளால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாகக் கடன் தள்ளுபடியை அறிவிக்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி வருகின்றனர். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், என்னநடக்க போகிறது? அறிவிப்பு வெளியாகுமா?
கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறு வணிகக் கடன் மற்றும் வாகனக் கடன் எனப் பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் தள்ளுபடி
இதில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இதர கடன்களுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி நகை மற்றும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும், அதற்கான நிதி வங்கிகளுக்கு அண்மையில் முழுமையாகக் கிடைத்ததும் மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 2 மாசத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. இந்த சூழலில், கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்று மக்கள் பலமாக நம்புகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
நகை அடமானம்
இதற்கு போட்டியாக ஆளும் கட்சியான தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் காரணமாகவே, மக்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் காட்டிலும், புதிய கடன்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் பெறுவது மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
அதேசமயம், குடும்பச் செலவுகள் மற்றும் திருமணங்களுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டத்தை அறிவிக்க அரசும் ஆலோசித்து வருகிறது. அரசியல் லாபங்களுக்காகக் கூட்டுறவு வங்கிக் கடன்களைப் பயன்படுத்துவது நிதிச் சுமையைத் தரும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும், தள்ளுபடி எனும் ஒற்றை எதிர்பார்ப்பால் மக்கள் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரூ.10 லட்சம் வரை லோன்
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் தொகை 85,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது 13,000 கோடி ரூபாய் அதிகமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்..!!
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இது குறித்து சில கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்குப் பெறப்படும் நிதி மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வங்கிகளை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும், இது வங்கிகளின் நிதி நிலைமையை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்...
இதற்கிடையே, திருமணம் போன்ற குடும்ப தேவைகளுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவது கடன் பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications