சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை கூட சமாளிக்கலாம்.. ஆனா கிளப்பி விடும் வதந்திகள் இருக்கே.. முடியலை.. தாங்க முடியலை

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேணாம்

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸ் பற்றின பீதிகள் அதிகமாகி வருகின்றன.. இதனால் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சில டிப்ஸ்களையும் பலர் வழங்க தொடங்கி விட்டனர். முன்னெச்சரிக்கைக்காக சொல்லப்படும் அவைகளை அலட்சியப்படுத்துவதற்கில்லை.. அதே சமயம் ஆனால் பல குறிப்புகள் நிரூபணம் ஆகாதவை.. நம்பகத்தன்மை அற்றவை.. அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்படாதவை.. அவைகள்தான் இவை:

Recommended Video

    தவறான செய்தியை பரப்பாதீங்க... ரெய்னா அறிவுரை
     coronavirus: various rumors about coronavirus

    1. சூடான உப்பு நீரில் வாயை கொப்பளித்தால் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்.. அது தவறு.. உப்புத் தண்ணீருக்கும், சுவாச நோய் தொற்றுக்கும் சம்பந்தமே இல்லை.. மேலும் ஒருசிலர் எத்தனால் கலந்து கொப்பளிக்கலாம் என்கிறார்கள்.. இது மிகவும் ஆபத்தானது.

    2. ஐஸ்கிரீமை தவிர்த்தால் தொற்று பரவாது என்கிறார்கள்.. இதுவும் தவறு.. எப்படி சூடான உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்தால் தவறோ, அதுபோலவே இதுவும்... இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தொற்றை கொன்றுவிடும் என்கிறார்கள். இவை இரண்டுமே ஏற்புடையது அல்ல என்பதே உண்மை.

    3. கால் மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் தொற்று பரவாது என்பதும் தவறுதான்.. இதற்கு சொல்லும் காரணம், இப்படி தண்ணீர் குடித்து கொண்டே இருந்தால் தொண்டையில் தங்கியிருக்கக் கூடிய நோய்த் தொற்று, தண்ணீருடன் வயிற்றுக்குள் சென்றுவிடும்... பிறகு அங்கேயுள்ள அமில சத்து அந்தக் கிருமிகளை கொன்றுவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால், சுவாசத்தால் பரவக் கூடிய எந்தவொரு நோய்த் தொற்றும் இப்படி அழிந்துவிடும் என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.

    4. நல்ல வெயிலில் நோய் தொற்று உயிருடன் இருக்காது, அந்த சூட்டிற்கு அழிந்துவிடும் என்கிறார்கள்.. இதுவும் தவறு.. யாராவது இருமினாலும் தும்மினாலும் 3 மணி நேரம் இந்த வைரஸ் காற்றில் உயிருடன் இருக்குமாம்.. சில பொருட்களின் மேற்பரப்பில் படிந்துள்ள வைரஸ் 2 அல்லது 3 நாளைக்குகூட உயிருடன் இருக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பமான நிலையில் இந்த வைரஸ் எப்படி செயல்படும் என்பது பற்றி இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

    5. அதேபோல, வெள்ளை பூண்டை அதிகமாக உட்கொண்டால் தின்றால் கரோனா வருவதை தடுக்கலாம் என்கிறார்கள்.. வெங்காயம் அடிப்படையிலேயே மருத்துவ குணம் உடையதுதான்.. எதிர்ப்பு சக்தி உடையதும்கூட.. இதை சாப்பிட்டால் நல்லது என்பதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால், வைரஸ் அழிவதற்கான மருத்துவ சான்றுகள் இல்லை.

    6. மாஸ்க் அணிவதால் தொற்று தடுத்துவிடலாம் என்பதும் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாது... மமாஸ்க் அணிந்தாலும் அது மூக்குவரைதான் மூடப்பட்டிருக்கும்... கண்கள் வழியாகக்கூட இந்த கொரோனா நுழைந்துவிடுமாம்.. காது வழியாகவும் செல்லும்.. ஆனால், அதிக அளவில் பரவாமல், உள்ளுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க இந்த மாஸ்க் உதவும்.. அதற்காக அணியாமலும் விட்டு விடக்கூடாது.. முக்கியமாக, இருமல், தும்முபவர்களுக்கு இது கட்டாயம் தேவை.. அவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, இந்த மாஸ்க் அந்த நீர்த்துளிகளை தடுத்துவிடும்.. அதனால் அடுத்தவர்களுக்கு பரவுவதும் மட்டுப்படுத்தப்படும்! மாஸ்க் 200 சதவீதம் மிக மிக முக்கியம் என்றாலும் வைரஸை ஒழித்து விடாது!

    இப்படி உறுதிதன்மை அற்ற, நம்பகத்தன்மை குறைந்த செய்திகள் நாளுக்கு நாள், ஆளாளுக்கு கிளப்பி விட்டு கொண்டு இருந்தாலும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. நம்மை சுத்தமாக வைத்து கொள்வதே இதன் அடிப்படை!!

    English summary
    coronavirus: various rumors about coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X