அண்ணாமலை பற்றி கேள்வி! கூல் டவுன்.. கூல் டவுன்.. அமைச்சர் சேகர்பாபுவை அமைதிப்படுத்திய தயாநிதி மாறன்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அமைச்சர் சேகர்பாபுவை, கூல் டவுன், கூல் டவுன் எனக் கூறி சாந்தப்படுத்தினார் தயாநிதி மாறன் எம்.பி.
மேலும், அண்ணாமலைக்கு எல்லாம் தாம் பதிலளிக்க முடியாது எனக் கூறிய அவர் சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்தக் கேள்விக்கு பதிலளிக்கச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

திசை திருப்பும் முயற்சி
மேலும், தற்போது பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருவதாகவும் அந்தப் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் நிலக்கரியை மாநிலங்களுக்கு அனுப்பாமல் மின் வெட்டு பிரச்சனையை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். மக்களின் கவனத்தை எவ்வாறு திசை திருப்பலாம் என்பதில் மட்டுமே மத்திய அரசு கவனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

கொசு ஒழிப்பு
சென்னையை பொறுத்தவரை கொசு ஒழிப்பு பணிகளை துணை மேயர் மிகச் சிறப்பாக செய்து வருவதாக தயாநிதி மாறன் கூறினார். அப்போது அருகில் நின்ற அமைச்சர் சேகர்பாபு, மேயரும் எனக் கூறியதை தொடர்ந்து மேயரும் இந்தப் பணிகளை நன்கு செய்து வருவதாக சுதாரித்துக் கொண்டு கூறினார் தயாநிதி மாறன். இதனிடையே கமலாலயத்திற்கு வருவதற்கு தகுதி வேண்டும் என அண்ணாமலை கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

சேகர்பாபு பதில்
அதற்கு அண்ணாமலைக்கு எல்லாம் தாம் பதிலளிக்க முடியாது எனக் கூறியதுடன் நக்கல் சிரிப்பு ஒன்றையும் உதிர்த்தார். இதனிடையே அவரது அருகில் நின்ற அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருப்பதால் தான் மக்கள் அவரை வெற்றிபெற வைத்து சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருப்பதாகவும் அண்ணாமலைக்கு தகுதி இல்லாததால் தான் அவரை தேர்தலில் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் எனவும் பதிலளித்தார்.

கூல் டவுன்
மேலும், அண்ணாமலை விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசத் தொடங்கியதும், அருகில் நின்று கொண்டிருந்த தயாநிதிமாறன் சிரிப்பை அடக்க முடியாமல் கூல் டவுன்.. கூல் டவுன்.. எனக் கூறி அமைச்சர் சேகர்பாபுவை சாந்தப்படுத்தி அழைத்துச்சென்றார்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications