Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு பேசினாரே! 6 தொகுதிகளுக்குள் அண்ணாமலையை சுருக்கிய டெல்லி! இது தான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் பரபரப்பாக இருக்கிறது பாஜக கூடாரம். ஒரு காலத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கு தன்னை பிம்பப்படுத்திக் கொண்ட அண்ணாமலை, மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என நினைத்திருந்த தன்னை ஆறு தொகுதிகளுக்குள் பாஜக தலைமை சுருக்கியதால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். தந்தையின் உடல் நலனை காரணம் காட்டினாலும் உண்மையில் பாஜக தலைமை மீதான அதிருப்தியே அண்ணாமலையை தேர்தல் பணிகளில் இருந்து விலக வைத்துள்ளதாக சொல்கின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக மட்டுமல்லாமல் பாஜகவும் தேர்தலை தீவிரமாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்காக 72 தேர்தல் பொறுப்பாளர்களை தமிழக பாஜக தலைமை நியமித்தது.

Annamalai bjp Tamil Nadu Assembly Election 2026

அண்ணாமலை பாஜக

இந்த பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு தலா 4 முதல் 6 தொகுதிகள் வரை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளின் சுற்றுப்பயண பொறுப்பு வழங்கப்பட்டது.

பாஜக உட்கட்சி மோதல்

ஆனால், இந்த பொறுப்பை அண்ணாமலை திடீரென நிராகரித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தனது தந்தை கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது டயாலிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த சூழலில் குடும்ப பொறுப்பே தன் முதல் கடமை என்றும், அதனால் வெளியூர்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய முடியாது என்பதாலும், தொகுதி பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்ததாக கூறினார். இந்த முடிவை கட்சி தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும், தன் பதவிக்கு மாற்றாக வேறு ஒருவரை தலைமை நியமிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக பாஜக

அண்ணாமலை அளித்த இந்த விளக்கம் ஒரு பக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அரசியல் வட்டாரங்களில் இதன் பின்னணி வேறு வகையாக பேசப்படுகிறது. 2021ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக மாநில தலைவராக செயல்பட்ட அண்ணாமலை, குறுகிய காலத்திலேயே கட்சிக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். பாஜக மீது பொதுமக்களின் பார்வையை மாற்றியதில் அவரது பங்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டங்களிலும், தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு கிடைத்த வரவேற்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

அண்ணாமலை ஒதுக்கல்

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த கூட்டணியில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இடையூறாக இருப்பதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்ற பேச்சும் உள்ளது. இதற்குப் பிறகு கட்சி நிகழ்வுகளில் அண்ணாமலையின் பங்கேற்பு குறைந்தது.

6 தொகுதிகளின் பொறுப்பு

அவர் விவசாயம், விளையாட்டு போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, தனிப்பட்ட பயணத்தில் இருப்பது போன்ற தோற்றம் உருவானது. சமூக வலைதளங்களில் கூட அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அண்ணாமலைக்கு 6 தொகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டது.

பாஜக தேர்தல் வியூகம்

ஆனால் அதனை அவர் நிராகரித்திருப்பது, உடல்நல காரணங்களைத் தாண்டி, கட்சி தலைமை மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவே பலர் பார்க்கிறார்கள். இனி வரும் நாட்களில் பாஜக தலைமை அண்ணாமலை தொடர்பாக என்ன முடிவு எடுக்கும், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா, அல்லது அவர் மேலும் ஓரம்கட்டப்படுவாரா என்பதெல்லாம் தமிழக அரசியலில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக மாறியுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலை என்ன வேலை பார்த்தாலும் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என்கின்றனர் பாஜகவினர்.

அண்ணாமலை அதிருப்தி

கடந்த காலங்களிலும் இப்போதும் எப்போதும் பாஜகவில் தனி மனித துதி கிடையாது. ஆனால் அண்ணாமலைக்கு பிறகு அது அதிகரித்திருக்கிறது. அவருக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி கட்சியின் சக தலைவர்களையே விமர்சிக்க வைத்தார். இதுவும் டெல்லி தலைமையில் கவனத்திற்கு சென்றது அதனால் தான் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பாஜக தலைமை ஒரே மாதிரியான தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால் அண்ணாமலை அதிருப்தி அடைந்திருக்கிறார். இது அவருக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+