Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்? நல்ல கதையா.. இருக்கே! இதெல்லாம் கணக்குல வராதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கெரியரின் உச்சத்திலிருந்து, அனைத்தையும் விட்டு விட்டு மக்களுக்காக விஜய் வீதிக்கு வந்திருக்கிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய கோடிக்கணக்கான சொத்து, ஆடம்பர கார், தனி விமானம் இதையெல்லாம் எங்கு விட்டுவிட்டு வந்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களமிறங்குகிறார். வெற்றி நிச்சயம், நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசிய விஜய், தன் மீது நம்பிக்கையில்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Vijay

இது ஒருபுறம் எனில், மறுபுறம் விஜய் பற்றி அவரது ரசிகர்களும், கட்சியினரும் கொடுக்கும் பில்டப்கள் எக்கசக்கமாய் இருக்கின்றன. விஜய், கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றும், மக்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. அப்படி என்னதான் தியாகம் செய்தார் விஜய்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவில் தனக்கு ரூ.410 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். இது தவிர தனி விமானம், சொகுசு பங்களாக்கள், சொகுசு கார்கள், இது தவிர கோடிக்கணக்கில் வருமானம், கிலோ கணக்கில் நகைகள் இதையெல்லாம் எப்போது அவர் விட்டுவிட்டு வந்தார்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

  • பயணத்திற்கு தனி விமானம்
  • 24 மணி நேரமும் பாதுகாக்க பவுன்சர்கள்
  • பனையூர் உட்பட 10 பங்களாக்கள்
  • மனைவி பெயரில் 3 கிலோ தங்க நகைகள், 135 காரட் வைர நகைகள்
  • ரூ. 404 கோடி அசையும் சொத்துக்கள்
  • ரூ. 115 கோடி அசையா சொத்துக்கள்
  • 2 BMW, 1 LEXUS, 1 Toyota velfire கார்கள்
  • 883 கிராம் தங்கம்
  • 2024-2025ல் ரூ.184 கோடி வருமானம்
  • கையில் ரூ.2 லட்சம் ரொக்கம்
  • வங்கி கணக்கில் ரூ.320 கோடி இருப்பு

இதையெல்லாம் விஜய் எங்கு விட்டுவிட்டு வந்தார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதற்கு பதில் சொல்ல முடியாமல், விஜய் ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+