ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது! கொள்கை தூக்கிப் போடுங்க.. பாஜக கூட்டணிக்கு போங்க! விஜய்க்கு அட்வைஸ்!
சென்னை: கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவுடன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் உலாவி வருகிறது. இதுவரை கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் கூட்டணி அமையுமா? அமையாதா? என்பது தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும், தனித்துப் போட்டியிட்டால் சீட்டு கிடைக்கும்.. ஓட்டு கிடைக்காது எனக் கூறியிருக்கிறார் பிரபல இயக்குநரான மோகன் ஜி.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
தனது கட்சி நடத்திய முதல் மாநாட்டிலேயே, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த அறிவிப்பின் மூலம் திமுக மற்றும் அதிமுகக்கு மாற்றாக ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் கூட்டணி
குறிப்பாக காங்கிரஸ் கட்சி தங்களை நோக்கி வரலாம் என்ற எதிர்பார்ப்பு விஜய் தரப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்தது. இதற்கிடையில், தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிவை ஏற்படுத்தி, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையும் பாஜக நன்கு உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் பாஜக கூட்டணி
அதே நேரத்தில், விஜய்யைச் சுற்றி அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு, திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் அரசியல் சூழ்நிலை சிக்கலாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் உள்ளக ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை
அதில், தனித்துப் போட்டியிட்டு கட்சியின் பலத்தை நிரூபிப்பதா அல்லது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விஜய் இன்று டெல்லி செல்ல உள்ளார். அவர் டெல்லியில் தங்கும் போது பாஜக தேசிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகம்
அப்படியான சந்திப்பு நடந்தால், தமிழக வெற்றி கழகம் பாஜக அணியில் இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து அனைவரும் கவனமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும், தனித்துப் போட்டியிட்டால் சீட்டு கிடைக்கும்.. ஓட்டு கிடைக்காது எனக் கூறியிருக்கிறார் பிரபல இயக்குநரான மோகன் ஜி.
விஜய்க்கு அட்வைஸ்
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தாவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது.." என கூறியுள்ளார்.
-
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications