அக்னிபாத் போராட்டம்.. இந்தளவு துணிச்சல் எப்படி வந்தது? தேச துரோகிகளை ஒடுக்கனும்.. இயக்குநர் பேரரசு
சென்னை: மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை நிச்சயம் திரும்பப் பெற முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், இது குறித்து பேரரசு சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிகளில் அக்னிபாத் என்ற புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
அக்னிபாத் வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பேரரசு
இந்தச் சூழலில் நேற்றைய தினம் சர்வதேச யோகா நாளை முன்னிட்டு நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் மோடி மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழ்நாட்டிலும் பல இடங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார்.

அக்னிபாத்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரரசு, "இந்திய நாடு அனைவருக்கும் பொதுவானது. நாட்டை இன்று ஒரு கட்சி ஆளும்.. நாளை ஒரு கட்சி ஆட்சிக்கு வரலாம். மக்கள் எந்த கட்சியை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. ஆனால் ஒருவர் எப்போதும் நாட்டிற்கு எதிரான கருத்துக்களைக் கூறக் கூடாது. மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் எந்தவொரு மதம் சார்ந்தோ இல்லை கட்சி சார்ந்த திட்டமோ இல்லை. அக்னிபாத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு சார்ந்த திட்டம்.

களை எடுக்க வேண்டும்
நமது நாட்டில் எந்தவொரு திட்டம் வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற நினைப்புடன் சிலர் உள்ளனர். அந்த தீயசக்திகளைப் பிரதமர் மோடி உடனடியாக களை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ரயிலைக் கொளுத்துகிறார்கள். ரயிலைக் கொளுத்தும் அளவுக்கு இளைஞர்களுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது. அவர்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். இப்படி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் எல்லாம் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்.

சேத துரோகிகள்
பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவிக்கும் அனைவரும் என்னைப் பொறுத்தவரைத் தேசத் துரோகிகள் தான். இது போன்ற துரோகிகளை அக்னிபத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. வன்முறை மூலம் இந்துத்துவாவை வளர்க்கிறார்கள் என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அக்னிபத் திட்டம் பொதுவானது. அதில் இந்து, முஸ்லிம் என வேறுபாடுகள் எதுவும் இல்லை. நாட்டிற்குச் சேவை செய்ய விரும்பும் யாரும் அக்னிபாத் திட்டத்தில் சேரலாம்!

பொய் பிரசாரம்
அக்னிபத் திட்டத்தில் இணையும் அனைத்து இளைஞர்களுக்கும் முறையான பயிற்சி மட்டுமின்றி தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது. மேலும், இதில் இணையும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமும் அளிக்கிறது. மத்திய அரசு இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சிலர் ஏதோ மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவை நாசமாக்குவதாகக் கூறுகிறார்கள்.

தேச பக்தி
உண்மையில் இங்குள்ள டாஸ்மாக் கடைகள் தான் இளைஞர்களை நாசமாக்குகிறது. முதலில் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். நாட்டிற்கு எப்போதும் நல்லதே நடந்துவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு இப்படிச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தேசப் பற்று உடன் இருக்கும் நபர்களைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. அவர்களையும் கூட கெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவர்களை எல்லாம் பிரதமர் மோடி ஒடுக்க வேண்டும்" என்றார்.

அக்னிபாத்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணையும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் வரை பாதுகாப்புப் படையில் பணிபுரிவார்கள். அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும். விடுவிக்கப்படும் வீரர்களுக்குப் பணி அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல துறைகள் முன்னுரிமையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications