2000 வருஷம் பின்னாடி! இந்து மதத்தை பிரிங்க.. ஆனா தமிழ்நாட்டையும் பிரிக்கனும்! திருமாவை விடாத பேரரசு!
சென்னை : இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என பிரிக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விசிகவைச் சேர்ந்த மதுரை மாமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உரையின் காணொலியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் வெளியிட்டிருந்தார். அதில்," திருமண விழாவில் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன் என கூறியிருந்தார்.

பிரிக்க வேண்டும்
அந்த பதிவில்," இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் என உரையாற்றினேன். இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது" என கூறினார்.

பேரரசு
இந்நிலையில் திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,"திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள்.

மதங்களை அகற்றி விடுங்கள்
மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதிப் பெயரை இணையுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம் இல்லை. அதனால், அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக, அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை. அதனால், முதலில் அந்த வார்த்தையை எங்குமில்லாமல் செய்து விடுங்கள்.

சரியான பதிலடி
இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள்.திருமாவளவன் சொல்வது போல் நாம், 2,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுவோம்." என அந்த அறிக்கையில் பேரரசு கூறியிருக்கிறார். இந்த அறிக்கையினை பாஜகவினர் பகிர்ந்து வரும் நிலையில், திருமாவளவன் இந்து மதத்தை பிரிக்க வேண்டுமென கூறவில்லை என, இந்து சமய அறநிலையத் துறையை தான் சொன்னார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications