DMDK: மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் தேமுதிக? கூட்டணி லேட்டுக்கு இந்த 10 பேர்தான் காரணமா?
சென்னை: தேமுதிகவில் திடீர் ட்விஸ்ட்டாக ராஜ்யசபா சீட்டுடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் என்டிஏ கூட்டணியிடம் தேமுதிக வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க தேமுதிக ஏன் காலம் தாழ்த்துகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபைத் தொகுதி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் யார் யார்
இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகியவை களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் யார் யார்
அது போல் அதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உள்ளன.
பாமக ராமதாஸ் நிலைப்பாடு
இந்த நிலையில் தேமுதிக, பாமக (ராமதாஸ்) ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. இதில் பாமக ராமதாஸை பொருத்தமட்டில் கட்சியே யாரிடம் இருக்கிறது என்பதில் வழக்கு நடந்து வருகிறது. மேலும் மாம்பழச்சின்னம் யாருக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
மாம்பழம் என்னாச்சு
அதற்குள்ளாக இரு தரப்பினரும் எங்களிடம்தான் மாம்பழச் சின்னம் இருக்கிறது என கூறி வருகிறார்கள். மேலும் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்குச் சென்றால் அங்கு அன்புமணி இருக்கிறார். திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்றால் விசிக இருக்கிறது. இதனால் ராமதாஸ் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார் என்றார்கள்.
ராமதாஸ் முடிவு என்ன
எல்லாவற்றுக்கும் மேல் மாம்பழச் சின்னம் குறித்து ஒரு முடிவு எடுக்கும் வரை ராமதாஸ் பொது சின்னத்திலோ அல்லது கூட்டணி கட்சியினரின் சின்னத்திலோதான் போட்டியிட வேண்டிய நிலை இருக்கிறது.
நாளுக்கு நாள் பேரம்
இந்த நிலையில் தேமுதிகவை எடுத்துக் கொண்டால் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து பேரத்தை கூட்டி வருகிறது என்றே சொல்லலாம். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தேமுதிக சொல்லிக் கொள்ளும்படியான எந்த வெற்றியையும் பெறாவிட்டாலும் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
14 தொகுதிகள்
அதாவது 14 தொகுதிகளை கேட்கிறதாம். ஆனால் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளுமே அத்தனை தொகுதிகளை ஒதுக்குவது சிரமம் என கூறிவிட்டதாம். எனவே தேமுதிகவுக்கு அதிமுக 8 இடங்களையும் திமுக 6 இடங்களையும் ஒதுக்க தயாராக இருப்பதாக சொல்லிவிட்டது.
மத்திய அமைச்சரவையில் இடம்
இந்த நிலையில் இந்த கூட்டணி ஏன் இன்னும் உறுதியாகவில்லை என்பதை விசாரித்த போதுதான் ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது அதிமுக கூட்டணியில் இடம் பெற 14 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டுடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 தொகுதிகளாவது
இதனால் என்டிஏ கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளதாம். 14 என இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது கேட்டு பெறலாம் என தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். அதாவது பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், வெங்கடேசன், நல்லதம்பி, சுபா, இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 10 பேர் கட்டாயம் போட்டியிடுகிறார்களாம்.
தேமுதிக டீல்
எனவேதான் தேமுதிக டீல் இன்னும் முடியாமல் இழுபறியாக இருக்கிறதாம். இந்த 10 பேரில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து 3 பேர் போட்டியிடுகிறார்கள். மற்ற 7 பேரில் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் தேமுதிக உள்ளது. விஜயகாந்த் இருந்த போதே அவருக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு தங்களுக்கு தோதுபட்ட கட்சிகளில் இணைந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னமும் விஜயகாந்த் விசுவாசிகளாக தேமுதிகவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருப்பதால்தான் சீட் எண்ணிக்கை விஷயத்தில் பிரேமலதாவால் இறங்கி வர முடியவில்லை என்கிறார்கள்.
அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை?
அதிமுக கூட்டணியிடம் மத்திய அமைச்சரவை பதவியை தேமுதிக கேட்பதால் அங்கு இடம் பெற வாய்ப்பில்லை. என்டிஏ கூட்டணிக்கு தமிழக தலைமையான அதிமுகவுக்கே இதுவரை மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில் தேமுதிக கேட்பது எப்படி கிடைக்கும்! எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று திமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை தேமுதிக அறிவிக்கும் என்கிறார்கள்.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications