திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் 14 தொகுதிகளில் குறைவாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். 22 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக முன்னணியில் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடை இறுதி செய்தற்கான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
தற்போதுவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, சிபிஐ 5, மதிமுக 4, மமக, ஐயுஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிக, சிபிஎம், தேமுதிக, மநீம கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிக கட்சிகள் இருப்பதால், கடந்தமுறையை விட குறைவான தொகுதிகளை பெற்று கொள்ள திமுக தலைமை வலியுறுத்தி வருகிறது.
இதற்கு விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வருத்தங்களை நேரடியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். கூடுதல் தொகுதி இல்லை என்பதால் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவை அதன் தோழமை கட்சிகள், எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் இந்தமுறை திமுகவும் குறைவான தொகுதியில போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது.
15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 2026 தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறையை விட இந்த தேர்தலில் 14 தொகுதிகள் குறைவாக திமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது.
கூட்டணி கட்சிகளுக்காக திமுக சுமார் 14 தொகுதிகளை விட்டு கொடுத்துள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். தொகுதி பங்கீடு நிறைவானதும் திமுக எத்தனை தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது, கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது தெரிந்துவிடும்.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?












Click it and Unblock the Notifications