கடல்ல அப்புறம்.. வீட்டிலேயே 16 அடியில் கருணாநிதி பேனா சின்னம்! திரும்பி பார்க்க வைத்த திமுக தொண்டர்!
கருணாநிதியின் பேனா சிலையை புது வீட்டில் நிறுவிய திமுக தொண்டர்
சென்னை: கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், திமுக தொண்டர் ஒருவர் தாம் கட்டிய புது வீட்டில் 16 அடி நீளம் கொண்ட கருணாநிதி பேனா சின்னத்தை நிறுவி கவனம் ஈர்த்துள்ளார்.
முழுக்க முழுக்க ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ள அந்த பேனா நினைவுச் சின்னத்தை வீட்டின் முகப்பில் நிறுவி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அவர்.
அதுமட்டுமல்லாமல் ''உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை'' என்ற வாசகத்தையும் கருணாநிதி படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையில் அச்சிட்டு வீட்டில் பொறுத்தியுள்ளார் அந்த திமுக தொண்டர்.

கருணாநிதி பேனா
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ள கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னமானது, சென்னையின் புதிய அடையாளமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடலில் கருணாநிதியின் பேனா சின்னம் அமைக்க கடும் எதிர்ப்புகள் ஒரு பக்கம் கிளம்பியுள்ள நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த திமுக தொண்டர் பிரபாகரன் என்பவர் தாம் கட்டியுள்ள புது வீட்டில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை 16 அடியில் நிறுவி கவனம் ஈர்த்திருக்கிறார்.

கவனம் ஈர்த்த திமுக தொண்டர்
முழுக்க முழுக்க ஃபைபர் மெட்டீரியலில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த பேனா நினைவுச் சின்னத்தின் கீழே கருணாநிதி எழுதுவது போன்ற படத்தை பொறித்து, அதில் ''உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை'' என்ற வாசகத்தையும் இடம்பெற வைத்திருக்கிறார். தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் திமுக தொண்டரின் இந்த புதிய முயற்சி கட்சியினர் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறது.

சாய்பாபா பக்தர்
கருணாநிதியின் பேனா சிலையை நிறுவிய திமுக தொண்டர் பிரபாகரன், தனது புதிய வீட்டிற்கு 'லியோ இல்லம்' என பெயர் சூட்டியிருக்கிறார். இவர் ஒரு சாய்பாபா பக்தர் என்பது கூடுதல் தகவலாகும். கடலில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் நிறுவப்பட்டால் அதை உடைப்பேன் என சீமான் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த பேனா சின்னம் திமுக தொண்டரால் நிறுவப்பட்டுள்ளது. தற்போது கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், விரைவில் கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் அரசுத் தரப்பில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலை வடிவில்
கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் பேனா சிலை அமையவுள்ள இடம் வரை கடல் அலை வடிவில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாடு வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் என்ற பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு கலை நுணுக்கங்களுடன் கூடிய கட்டுமானப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications