‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’: ‘6 பேர் விடுதலை' துரும்பையும் கிள்ளிப்போடல.. திமுகவை விமர்சித்த மாஜி!
சென்னை : 6 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை, ஆனால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நாங்கள் எடுத்த தொடர் நடவடிக்கையால் தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளனையும் அதைத் தொடர்ந்து 6 பேரையும் விடுதலை செய்துள்ளது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை விடுதலை செய்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், திமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
அதனை விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது போல பேசுவது திமுக வழக்கம் என விமர்சித்துள்ளார்.

எழுவர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

திமுக - ஸ்டாலின்
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது என அவர் குறிப்பிடார் மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது திமுக அரசுதான் என்றும் தெரிவித்தார்.

ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்
இந்நிலையில் 6 பேர் விடுதலை தீர்ப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "6 பேர் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாயம் தேடுகிறார். திமுக நினைத்திருந்தால் 7 பேரையும் முன்பே விடுவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 7 பேர் விடுதலைக்காக திமுக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டது கிடையாது. திமுக இந்த நேரத்தில், 'ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்பதுபோல எங்கே எது நடந்தாலும், அதற்கு நாங்கள்தான் காரணம் என்பது மாதிரி சந்தனத்தைப் பூசிக்கொள்கிறது.

கில்லாடித்தனம்
இந்த மாதிரி ஒரு கில்லாடித்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே தவறான தகவலைப் பரப்பி அதன் மூலம் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். எப்போதும் வாய்மைதான் வெல்லுமே ஒழிய பொய்மை வென்றதாகச் சரித்திரம் கிடையாது. 7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவின் தொடர் நடவடிக்கையால் தான் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறைக்கக்கூடாது என்றார்
முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், நளினியை தவிர மீதிப் பேரின் தண்டனையைக் குறைக்கக் கூடாது என தன் கையாலேயே எழுதியிருக்கிறார். இது கோப்புகளில் இருக்கிறது. அன்றைக்கு இந்த நிலை எடுத்து, இன்றைக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தவுடன் நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

எடுத்த நிலை மாறாமல்
நேற்று ஒன்று, இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என நிமிஷத்துக்கு நிமிஷம் வேடங்களை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிற செயலில் தான் திமுக ஈடுபடுகிறது. எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் எப்போதும் உறுதியாக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்" என விமர்சித்துள்ளார்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications