திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் நியமனம்.. தயாநிதி, கதிர் ஆனந்துக்கு புதிய பொறுப்பு!
சென்னை : திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமித்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக தலைமை அறிவிப்பு
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, கிளை, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த அக்டோபரில் பொதுக்குழு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க சட்ட திட்ட விதி பிரிவுகளின்படி, அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் - செயலாளர் - இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அணி நிர்வாகிகள்
சமீபத்தில், திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று தகவல் தொழில்நுட்ப அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட பிரிவுகளுக்கான மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

புதிதாக 2 அணிகள்
இந்நிலையில் இன்று திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர்களாக கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக கதிர் ஆனந்த் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்நிலை செயல் திட்டக்குழு
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள்
மேலும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கரூர் கேசி பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எவ வேலு, பொன் முத்துராமலிங்கம், ஜெகத்ரட்சகன், முபெ சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலும் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications