பாஜகவின் “சீக்ரெட் அஜெண்டா”.. ரெடியாகும் திமுக! புதுப் பாய்ச்சலுடன் பயணிப்போம் என ஐடி விங் சூளுரை
சென்னை: காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்குள் நுழையும் பாஜகவின் திட்டத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி புதிய பாய்ச்சலுடன் செயல்பட இருப்பதாக திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.
75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம்
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை மற்றும் கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசி தமிழ்நாடு இடையே உள்ள பண்டைய நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் ஒருங்கிணைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சமஸ்கிருத திணிப்பு
இதில் இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், இதில் தமிழ்நாடு அரசு சார்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் சமஸ்கிருதத்தையும், பாஜகவின் திட்டத்தையும் திணிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் திமுக, திராவிடர் அமைப்புகள், கம்யூனிஸ இயக்கங்களை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

டிஆர்பி ராஜா விளக்கம்
இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளதாவது, "இவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். சாத்தான்கள் வேதம் ஒதுவதும், சங்கித்வா நடத்தும் காசித் கூட்டம் தமிழ்ச் சங்கமம் என்பதும் ஒன்றுதான்.

திமுக ஐடி விங்க்
சமஸ்கிருதத்தின் துணையின்றித் தனித்து இயங்கும் வலிமை கொண்ட நம் தாய்த்தமிழை சிதைத்து, அதை ஆரியப் பண்பாட்டுடன் கலந்து மறைந்திடச் மறைமுகத் திட்டத்தை நேரடியாக வெளிப்படுத்திட சமூக வலைத்தளங்களில் புதுப் பாய்ச்சலுடன் இந்தியா முழுவதும் பயணிக்க இருக்கிறது. தமிழைக் காத்திடும் அரசை வழி நடத்தும் முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் ஆணையேற்று செயல்படும் கழகத்தகவல் தொழில்நுட்ப அணி.

ஒருங்கிணைப்பாளர்
காசித் தமிழ்ச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பவர் பெயர் சாமு சாஸ்திரி. சமஸ்கிருத அறிஞரான இவர் ஒன்றிய அரசின் பாரதிய பாஷா சமிதியின் அமைப்பாளர். இப்படிப்பட்டவர் எத்தனை தமிழறிஞர்களை இந்த சங்கமத்திற்கு ஒருங்கிணைத்திருக்கிறார் என்று தேடினால், தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றி வரும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் யாருமில்லை.

மறைமுக திட்டம்
செம்மொழித் தமிழுக்கு எதுவும் செய்யாமல் சமஸ்கிருதத்தைப் போற்றி, இந்தி திணிப்பதுதான் மறைமுக செயல்திட்டம். காசிக்கு கொண்டுபோய் கங்கையில் தமிழைக் கரைத்துவிடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கு நினைவூட்டுகிறோம். கங்கை கொண்டவன் எங்கள் தமிழ்ச்சோழன். கங்கையல்ல.. கடலில் கரைத்தாலும் காலத்தால் மூத்த மொழி, நம் கரையாத தாய்மொழியாம் தமிழ் மொழி." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications