எளியோரை அரவணைக்கும் வள்ளல்.. விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அண்ணாமலை, கனிமொழி வாழ்த்து!
சென்னை : நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்த், அரசியலில் கால் பதித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார்.
இன்று பிறந்தநாள் காணும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் கோலோச்சிய விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார் விஜயகாந்த்.
Recommended Video

பிறந்தநாள் கொண்டாடும் கேப்டன்
2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தார். தொடர்ந்து, தேர்தல்களில் தேமுதிகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. உடல் நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி அவ்வப்போது தனது தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அண்ணாமலை வாழ்த்து
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக பாஜகசார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கனிமொழி வாழ்த்து
அதேபோல் திமுக எம்.பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, "தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications