சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் முன்னிலையில்.. ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

 அவருக்கு எம்பி பதவியா? போச்சே போச்சே.. அவசரமாக வேலையில் இறங்கிய திமுக அவருக்கு எம்பி பதவியா? போச்சே போச்சே.. அவசரமாக வேலையில் இறங்கிய திமுக

 மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தல்

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து 6 பேர்

தமிழகத்திலிருந்து 6 பேர்

தமிழகத்துக்கு மாநிலங்களவையில் 18 பேருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

எம்.எல்.ஏக்கள் ஆதரவின் அடிப்படையில் தி.மு.க சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படலாம். அதிமுக சார்பில் 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்படலாம். திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஒன்றிய சேர்மன் ஆர்.தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல்

ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ள ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 24) அன்று தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர்களான கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

English summary
DMK Rajya sabha candidates Girirajan, Rajeshkumar and Kalyanasundaram filed their nomination papers today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X