“காங்கிரஸ் வந்தால் வரட்டும்.. வராவிட்டால் போகட்டும்” சட்டென வார்த்தையை விட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்!
சென்னை: கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து வரும் கருத்துக்கள், திமுக கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அமைச்சர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. அதேபோல அதிமுக இருந்தது. ஆனால், எம்ஜிஆர் ஜெயலலிதாவுடன் அக்கட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், திமுக அப்படியல்ல. நம்முடைய வழி என்ன? திராவிட இயக்கம்தான் நம்முடைய அண்ணா தொடங்கிய இயக்கம். அப்படி உருவானதுதான் திமுக.

அமைச்சர் பேசியது என்ன?
அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். அங்கு யாரும் இல்லை. நிர்வாகிகள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களும் அந்த பதவிக்காக அங்கு இருக்கிறார்கள். தேர்தலில் சீட்டு யாருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து அங்கு காத்திருக்கிறார்கள். மற்றபடி தொண்டர்கள் யாரும் அங்கு கிடையாது. ஏற்கெனவே அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ராமநாதபுரம் முதுகுளத்தூரில் அதிமுக டெபாசிட் இழந்தது.
திமுக vs அதிமுக
ஒ.பன்னீர்செல்வம் தேர்தலில் நிற்கிறார். யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். தேர்தலில் வெற்றித் தோல்வி இயல்பானது. நான் 12 தேர்தலில் இதுவரை போட்டியிட்டிருந்தேன். அதில், 8ல் ஜெயித்தேன், 4ல் தோற்றேன். இதனால் நான் வருத்தப்படவில்லை. ஆனால், கொள்கை முக்கியம். நம்முடைய பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கினார். அவருடைய தலைவர் யாருன்னா பெரியார். நம்மெல்லாம் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
திராவிட ஆட்சி
திராவிட இயக்கம் எதற்காக உருவாக்கப்பட்டது? கொட்டுகின்ற மழையில் ராபின்சன் பூங்காவில் அண்ணா இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். மிட்டாமிராசுகள், பெருந்தனக்காரர்கள், ஆலை அதிபர்கள், தொழிலதிபர்கள் இவர்களை எதிர்த்துதான் நம்முடைய இயக்கம்.
நாமெல்லாம் இப்ப நிக்கிறோம்னா.. அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, ஒன்றிய செயலாளராக, நகர செயலாளராக, பேரூர் கழக செயலாளராக அடித்தட்டு மக்கள் எல்லாம் இன்றைக்கு பதவிக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட ஆட்சிதான்.
மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் கட்சி கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். அவர்கள் வந்தா வரட்டும், வரவில்லை எனில் போகட்டும். கூட்டணியை நம்பி எல்லாம் அரசியல் நடத்த முடியாது" என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக நேற்று, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவை போட்டிருந்தார். "மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு" என்று கூறியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ள 2006 தேர்தலில் என்ன நடந்தது ?
திமுக கூட்டணி மொத்தமாக 163 இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. திமுக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தயவோடு ஆட்சியில் பங்கு கொடுக்காமல் திமுக ஆட்சியமைத்தது.
2006-2011 ஆட்சிக்காலத்தை மைனாரிட்டி திமுக ஆட்சி என தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்து வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications