கூட்டுறவு கடன்.. மகளிர் உதவி தொகை.. திமுகவின் அடுத்த அஸ்திரம் எப்படி இருக்கும்.. கனிமொழி பேட்டி
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பேட்டியின் போது கூறினார். பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்றும், எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்றும் கனிமொழி கூறினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ். சுரேஷ் சம்பந்தம் அடங்கிய குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.

மனுக்கள் அளித்தவர்கள்
கூட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை, ஆதிதிராவிடர் மகாஜனசபை, அனைத்து முதலியார் வேளார் சங்கங்களின் பேரவை, இளைஞர் படுகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர்.
திமுக தேர்தல் அறிக்கை
இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து, தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளது. இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அமைப்புகள் வந்திருந்தனர். அவர்களுடைய கருத்துக்களை கூறினார்கள்.
முதல்வர் வெளியிடுவார்
பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்றார்.
கனிமொழி பேட்டி
மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு கனிமொழி பதில் அளித்து பேசும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரசிடம் நடந்து வருகிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து எதுவும் பேசவில்லை., தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை குழு தான் முடிவு செய்யும் என்றார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பேசும் போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது ஏற்க முடியாது என கூறிய கனிமொழி, யாராவது புதிய கட்சி திமுக கூட்டணியில் வந்தால் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.
3 கேஸ் சிலிண்டர்கள்
அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை இன்று வெளியிட்டிருக்கிறது. இதன்படி மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும். வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதம் ரூ.2000 உதவி தொகை
ஏற்கனவே அதிமுக வெளியிட்ட முதற்கட்ட தேர்தல் அறிக்கையில், , மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும், வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
கூட்டுறவு கடன்
திமுகவும் இந்த தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகையை 1500 அல்லது 2000 ரூபாய் ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மாதந்தோறும் மின் கட்டணம், மாணவர்களின் கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இல்லாமல் வேறு சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுக வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இதுதவிர கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தள்ளது. எனவே ஆளும் கட்சியான திமுக அறிவிக்க போகும் தேர்தல் அறிக்கை குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications