"அச்சாரம்" போட்டாச்சு போல.. விஐபியை சந்தித்த ஓபிஎஸ்.. எடப்பாடியை நெருங்கும் மேஜர் திட்டம்.. சுபம்?
ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி பக்கம் மனம்மாறி தாவக்கூடும் என்கிறார்கள்
சென்னை: சோர்ந்து போயுள்ள ஓபிஎஸ் மெல்ல மெல்ல மனம் மாறி வருவதாக கூறப்படுகிறது.. இதை பற்றின ஒரு தகவல்தான் அரசியலில் வட்டமடிக்கிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்பிடம் தரவேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துவிட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினர், தொடர்ந்த மேல் முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கி வருகிறது.. அதிமுக மெல்ல மெல்ல அவரிடம் சாய்ந்து வருகிறது.

பாஜக
இதையடுத்து, கடந்த 4 நாட்களாகவே ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார்.. அறிக்கைகள், பேட்டிகள் எதையும் காணோம்.. அடுத்தக்கட்டமாக என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொண்டர்களின் செல்வாக்கும் பெருமளவு இல்லை.. ஆதரவாளர்களும் எடப்பாடி டீமில் இருந்து வரவில்லை.. பாஜகவும் கைவிட்டுவிட்டது.. டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.. எனவே, ஓபிஎஸ் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.. வேண்டுமானால் டிடிவி தினகரனைப்போல தனிக்கட்சி தொடங்கலாம் அல்லது டிடிவியுடன் இணைந்தும் செயல்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகிறார்கள்..

ஓகே + ஓகே
அப்படி டிடிவி தினகரனின் தலைமையை ஏற்க, ஓபிஎஸ் முன்வருவாரா? அல்லது ஓபிஎஸ் தலைமையில் டிடிவி செயல்படுவாரா? இவர்கள் இருவரில் யாராவது ஒருவரின் தலைமையை ஏற்க சசிகலா சம்மதிப்பாரா? என்பதெல்லாம் சந்தேகம்தான்.. ஆனால், ஓபிஎஸ் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அதனால் சசிகலாவுக்கு எப்படி, ஆதரவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறதோ, அதுபோலதான், கட்சிக்கு இந்த சுற்றுப்பயணம் மூலம் பெரிதாக பலன் தராது என்றும் சொல்கிறார்கள். நாலாபக்கமும் தன்னுடைய அணிக்கு ஆதரவும், செல்வாக்கும் இல்லை .என்பதால், ஓபிஎஸ் மனவருத்தத்தில் இருக்கிறாராம்..

மேஜர் மேட்டர்
இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான தகவல் கசிந்து வருகிறது..இப்படிப்பட்ட சூழலில்தான், டிடிவி தினகரனிடம் ஓபிஎஸ் சில விஷயங்களை மனம் விட்டு பேசினாராம்.. தேர்தல் வரப்போகிறது.. கட்சி ஒன்றாக வேண்டும்.. இப்படி இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.. வேண்டுமானால் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியே தொடரட்டும்.. இணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொள்கிறேன்.. கட்சி தான் முக்கியம் என்றாராம்.

ஸாரி கேட்பாரா?
ஓபிஎஸ் இப்படி இணங்கி வருவார் என்பதை எடப்பாடி தரப்பு ஏற்கனவே எதிர்பார்க்கும் ஒன்றுதான் என்கிறார்கள்.. அதனால்தான், ஓபிஎஸ் மறுபடியும் அதிமுகவுக்கு வந்தால்,ஏற்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. ஒருவேளை எடப்பாடியே ஓபிஎஸ்ஸை ஏற்றாலும், அவருடன் இருக்கும் தலைகள், ஓபிஎஸ் & கோவை ஏற்குமா? அல்லது ஓபிஎஸ்ஸே மனம்மாறி எடப்பாடியிடம் சென்றாலும், ஓபிஎஸ்ஸிடம் இருக்கும் டீம், அதற்கு சம்மதிக்குமா? தெரியவில்லை.. எப்படியோ எல்லாம் ஒன்றுசேர்ந்தால் சரி..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications