Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வதந்தியை நம்ப வேண்டாம்.. ஆல் பாஸ் எல்லாம் கிடையாது.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பளீர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 1- 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளியான செய்திகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த வருடம் கொரோனா காரணமாக தேர்வுகள் நடக்கவில்லை. கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காத நிலையில் இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. 11, 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்.,25 தொடங்கியது. அதேபோல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வும் ஏப்.,25ல் தொடங்கியது.

தேர்வுகள் எப்போது

தேர்வுகள் எப்போது

இது போக 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 10 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த நிலையில்தான் 1 முதல் 9ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை தெரிவித்ததாக பல்வேறு செய்திகள் வந்தன.

வதந்திகள்

வதந்திகள்

அதாவது தமிழ்நாட்டில் 1- 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. புதுச்சேரியில் வெளியான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததாக பலர் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நிச்சயம் நடக்கும்

நிச்சயம் நடக்கும்

அனைவரும் ஆ ல் பாஸ் என்று வெளியான செய்தி தவறு.இறுதித்தேர்வு திட்டமிட்டப்படி மே 6ம் தேதி நடக்கும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6-9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும்.

விடுமுறை எப்போது

விடுமுறை எப்போது

6-9ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கும் நிலையில் ஜுன் 13ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே இது தொடர்பாக வெளியான வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. 10 வகுப்பு பொதுத்தேர்வு மே 30ம் தேதி முடிய உள்ளதால் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+