சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரேமலதா பேச்சுக்கு இப்படி பொசுக்குன்னு பதில் சொல்லிட்டாரே ஜெயக்குமார்! அப்போ கூட்டணி?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்காவிட்டாலும், கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், அதிமுக கூட்டணி குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கமல்ஹாசன் கூறுவதைப்போல இது பணத்தால் அமைந்த கூட்டணி கிடையாது. அதிமுக அரசு மக்களுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஒருவேளை பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளதைதான், கமல் புரியாமல் பேசி வருகிறாரா, என்று தெரியவில்லை என்றார்.

ஸ்டாலின் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. அதிமுகவை கழற்றி விடுகிறது தேமுதிக? ஸ்டாலின் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. அதிமுகவை கழற்றி விடுகிறது தேமுதிக?

பிரேமலதா பேச்சு

பிரேமலதா பேச்சு

எங்கள் பலம் எங்களுக்கு தெரியும் என்றும், உரிய மரியாதை கொடுக்கும் இடத்துக்கு தேமுதிக செல்லும் என்றும், பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:

கருத்து சொல்ல அவசியம் இல்லை

கருத்து சொல்ல அவசியம் இல்லை

அது அவர்கள் கட்சி விருப்பம். அதை தெரிவிக்கிறார்கள். இதில், கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி கதவு திறந்துள்ளது. யார் வேண்டுமானாலும் கூட்டணிக்காக, பேசலாம்.

ஜெயக்குமார் பேட்டி

ஜெயக்குமார் பேட்டி

அந்த வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன இந்த கூட்டணி அமையலாம் அல்லது அமையாமலும் இருக்கலாம் அமைந்தால் சந்தோஷம் அமையாவிட்டாலும் இருக்க முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

கவலையில்லை

கவலையில்லை

விஜயகாந்த்தை, அதிமுக தலைவர்கள் நேரில் சென்று உடல்நலம் விசாரிக்கவில்லை என்பதால், அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கூட்டணி அமையாவிட்டாலும் கவலையில்லை என்று, ஜெயக்குமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Jayakumar says, DMDK may form an alliance with AIADMK if not we are not going to worry he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X