பாஜக மகத்தான வெற்றி..பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் வாழ்த்து
சென்னை : உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் முன்னிலையும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இதேபோல் பஞ்சாப் தவிர மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

ஆம் ஆத்மி வெற்றி
யாரும் எதிர்பாராத விதமாக பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்று பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பஞ்சாபில் காங்கிரஸும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் படுதோல்வி அடைத்துள்ளது. கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் கெஜ்ரிவால் மாடல் அரசியல் காரணமாக பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

உத்திர பிரதேச தேர்தல்
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதோடு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தேர்தல் வெற்றி
பஞ்சாப்பில் எதிர்பார்த்தது போலவே பாஜக படுதோல்வியை சந்தித்தாலும் மற்ற மாநிலங்களில் பெற்ற வெற்றியை பாஜக தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், " மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications