டிடிவி தினகரனை பார்த்ததும்.. கைகுலுக்கிய எடப்பாடி.. நட்பாக சிரித்த வேலுமணி.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று பிரதமர் மோடியை அதிமுக எஸ்.பி வேலுமணி மற்றும் அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் அருகருகே நின்று வரவேற்றனர்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த மேடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகத் தோன்றவுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக - பாஜக கைகோர்த்துள்ளன. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அமமுக (T.T.V. தினகரன்), தமாகா (ஜி.கே. வாசன்), ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜனவரி 21, 2026 அன்று டி.டி.வி. தினகரனின் அமமுக இக்கூட்டணியில் இணைந்தது. இன்று மதுராந்தகத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் இக்கூட்டணி தனது பலத்தைக் காட்டவுள்ளது.
மோடி தமிழ்நாடு வருகை
சென்னை விமான நிலையத்துக்கு சற்று முன் பிரதமர் மோடி வந்தடைந்தார். ஆளுநர் ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் பிரதமருக்கு வரவேற்பளித்தனர். அதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுராந்தகத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். சற்று நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முக்கியத் தலைவர்கள் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர். 20 நிமிட பயணத்திற்கு பின்பே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்பதற்காக பிரமதர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்தடைந்தார்.
மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார்
தேஜகூ பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கியத் தலைவர்கள் பலர் வருகை புரிந்துள்ளனர். டிடிவி தினகரனும், எஸ்.பி.வேலுமணியும் பரஸ்பர வணக்கம் செலுத்திக் கொண்டனர். இதற்கு இடையே மதுராந்தகத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. மழைக்கு நடுவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கியது. ஜிகே வாசனைத் தொடர்ந்து, அண்ணாமலை உரையாற்றி வருகிறார். மேடையில் டிடிவி தினகரனுடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். இவர்கள் இருவருக்கும் இடையில் பல மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில்.. இன்று ஒன்றாக கரம் கோர்த்துள்ளனர்.
அண்ணாமலை பேச்சு
இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசுகையில், கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம். மழை பெய்கிறது. மழையால் தாமரை, இலை மலரும். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு கூடியுள்ளோம்.
திமுகவுக்கு செல்லும் வாக்குகள் தீய சக்திக்கு செல்லும் வாக்குகள். அதனைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. லஞ்சம் இல்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. தற்போது இங்கே சூரியன் மறைந்துவிட்டது. இது திமுக என்னும் தீய சக்தியின் தோல்வியின் அறிகுறி. அதற்கான அடையாளம்தான் இந்த சூரிய மறைவு என்று அண்ணாமலை பேசினார்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே











Click it and Unblock the Notifications