Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது 2026-ஐ நோக்கி 'டாப் கியரில்' பறந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆளுங்கட்சியின் 'ஸ்டாலின் தொடரட்டும்' முழக்கம், மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் என களம் அனல் பறக்கிறது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, சினிமா இமேஜை நம்பி ஒரு புதிய 'ரூட்' போட்டிருக்கிறார். அதுதான் 'தல' ரூட்!

tamil nadu assembly elections 2026 Vijay TVK

மிஸ்ஸான விஜய்... கடுப்பான ஈபிஎஸ்!

கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு பலமாக அடிபட்டது. விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK), எப்படியும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் அது. எடப்பாடியும் இதற்காக வெளிப்படையாகவே சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருந்தார். பாருங்க அவங்களே பச்சைக்கொடி காட்டிட்டாங்க என்றெல்லாம் கூறி இருந்தார்.

ஆனால், "நாங்க தனிச்சுப் போட்டி... கொள்கைதான் முக்கியம்" என விஜய் 'கறார்' காட்ட, அதிமுக-வின் கணக்கு தப்பியது. விஜய் முதல்வர் வேட்பாளர் கேட்டதாகவும்.. அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. விஜய்யை நம்பிப் போட்ட ஸ்கெட்ச் சொதப்பிய கடுப்பில் இருந்த எடப்பாடிக்கு, இப்போது கிடைத்திருக்கும் புது ஆயுதம் - அஜித் குமார்!

தெற்கில் 'தல' தரிசனம் - என்ன நடக்கிறது?

சமீபகாலமாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் பிரச்சாரங்களில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் அரங்கேறுகிறது. எங்கு சென்றாலும் கையில் 'தல' அஜித்தின் பிரம்மாண்ட புகைப்பட பிரேம்கள்! சில இடங்களில் அவருக்கு அஜித்தின் புகைப்படத்தைப் பரிசாக சிலர் வழங்குகிறார்கள், சில இடங்களில் அஜித்துடன் அவர் இருப்பது போன்ற 'மார்பிங்' பேனர்கள் எட்டிப்பார்க்கின்றன.

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், அவரது ரசிகர்களுக்கும் அஜித்தின் ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் அந்த 'நிழல் யுத்தத்தை' வாக்குகளாக மாற்ற எடப்பாடி துடிக்கிறார் என்பதுதான் நிதர்சனம். "விஜய் எங்களுக்கு வேண்டாம்... எங்களுக்கு அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லாமல் சொல்வதுதான் எடப்பாடியின் லேட்டஸ்ட் பாலிடிக்ஸ்.

அஜித்தின் 'சைலண்ட்' மோட்!

ஆனால், இங்கேதான் எடப்பாடிக்கு ஒரு சிக்கல் காத்திருக்கிறது. 2011-லேயே தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு, "என் புகைப்படத்தையோ பெயரையோ யாரும் அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது" என்று 'ஸ்ட்ரிக்ட்' ஆர்டர் போட்டவர் அஜித். கடந்த 2019-லேயே, "நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை, அளிக்கப்போவதும் இல்லை" என்று பட்டவர்த்தனமாக அறிவித்தவர்.

இப்போது எடப்பாடி அணி அஜித்தின் புகைப்படத்தைக் கையில் எடுத்திருப்பது, அவரது ரசிகர்களிடையே ஒருவித நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. "அஜித் சார் பெயரைக் கெடுக்காதீங்க பாஸ்" என்பதுதான் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களின் கமெண்ட்டாக இருக்கிறது.

"விஜய் வராத ஏமாற்றத்தை அஜித்தை வைத்து ஈடுகட்டப் பார்க்கிறார் எடப்பாடி. ஆனால், அஜித் இதற்கு எதிர்வினை ஆற்றமாட்டார் என்பது அவருக்குத் தெரியும். அதேநேரம், 'வாய்ஸ்' கொடுக்கச் சொல்லி அதிமுக தரப்பிலிருந்து தூது போனதாகவும், அதற்கு 'சான்ஸே இல்லை' என ராயல் சல்யூட் அடித்து அஜித் தரப்பு அனுப்பிவிட்டதாகவும் ஒரு தகவல் ரத்தத்தின் ரத்தங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது!"

விஜய்க்குப் போட்டியாக அஜித்தை முன்னிறுத்தி குளிர் காய நினைக்கும் அதிமுக-வின் இந்த வியூகம், அஜித்தின் மௌனத்தால் தவிடுபொடியாக வாய்ப்பு அதிகம். சினிமா இமேஜை விட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பேசினால்தான் எடப்பாடிக்கு 'வெற்றி' வசப்படும்.

இல்லையென்றால், "சினிமாக்காரங்க பின்னாடி நாங்க போகமாட்டோம்" என்று சொன்ன அதே எடப்பாடி, இப்போது சினிமா புகைப்படத்தையே நம்பியிருப்பது 'அரசியல் முரண்நகை'தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+