Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிவி எங்களுக்கு போட்டியா? போங்க தம்பி காமெடி பண்ணிகிட்டு! டேட்டாக்களுடன் பொளந்து கட்டும் ர.ர.க்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில் டிடிவி தினகரனின் வாக்கு சதவீதத்திற்கும் அதிமுக வாக்கு சதவீதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது எனவும், பல தொகுதிகளில் அதிமுக தோற்றிருந்தாலும் அதற்கும் டிடிவி தினகரனின் வாக்கு வங்கிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் புள்ளி விபரங்களுடன் கூறி வருகின்றனர்.

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என பல அணிகளாக பிரிந்து செயல்படுவதால் தான் திமுக வெற்றி பெற்றது என ஓ,பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவரும் நிலையில் அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்கின்றனர்.

அதே நேரத்தில் பல தொகுதிகளில் அதிமுக தோற்றிருந்தாலும் அதற்கும் டிடிவி தினகரனின் வாக்கு வங்கிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் புள்ளி விபரங்களுடன் கூறி வருகின்றனர்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி

அதிமுக எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள், அதிமுக தோற்ற தொகுதிகளில் வித்தியாசத்தை விட அமமுக அதிக ஓட்டுக்கள் வாங்கியது வெறும் 15 தொகுதிகள் மட்டும் தான். 35 தொகுதி 50 தொகுதி என்றெல்லாம் சொல்ல வேண்டாம். இந்த 15 தொகுதியில், 7 தொகுதிகள் 5000க்கும் குறைவான வித்தியாசம். சாத்தூர் தொகுதியில் அமமுக பெற்ற ஓட்டு என்பது ராஜவர்மனுக்குக் கிடைத்த ஓட்டு. இப்போது அவர் அதிமுகவில் இருக்கார்.

சசிகலா - டிடிவி தினகரன்

சசிகலா - டிடிவி தினகரன்

மன்னார்குடியில் அதிமுக ஜெயிக்கவே இல்லை 1991 க்கு அப்பறமா. கம்யூ. கொஞ்சம் பலம். இந்த தொகுதி தினகரனால் தான் தோற்றது அதிமுக என்பது நல்ல நகைச்சுவை. பாபநாசம் தொகுதி மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் வலுவான (2006,2011,2016) கோட்டை. அவர் மகனுக்கு கொடுத்திருந்தால் உறுதியான வெற்றியைப் பெற்றிருப்பார். வைத்திலிங்கத்தின் அட்டூழியத்தால் இழந்த தொகுதி அது. இப்படி ஒவ்வொரு தொகுதியுமே சிறு சிறு நிர்வாக கோளாறுகளால் இழந்தவைகள் தான்.

சாதி ஓட்டுக்கள்

சாதி ஓட்டுக்கள்

தினகரனுக்கு என்று விழுந்த சாதி ஓட்டுக்கள் அதிமுகவுக்கு என்றைக்கும் விழாது. உதாரணமாக மன்னார்குடியில் சசிகலா - தினகரன் அதிமுகவில் இருந்த போதும் ஜெயிக்கவேயில்லை. அதிமுக 5000-1000 வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் சீமான் கமல் கூட வித்தியாசத்தைக் காட்டிலும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறார்கள். அதனாலென்ன? உடனே அவர்களை இணைத்திருக்க வேண்டுமென்றா முட்டாள்தனமாக கருத்திட முடியும்?

லாபம் இல்லை

லாபம் இல்லை

அதிமுகவால் தான் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் ஏகப்பட்ட லாபமே தவிர, தினகரனால் சசிகலாவால் இன்றைக்கு அல்ல என்றைக்குமே அதிமுகவிற்கு லாபமிருந்ததில்லை. அவர்களை தூக்கி எறிந்தது எறிந்ததாகவே இருக்கட்டும். இனி அதிமுக பலம் குறைந்ததாக கருதப்படும் தொகுதிகளில் கவனம் செலுத்தி பலம் ஏற்படுத்தி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டுமேவொழிய, தூக்கி எறிந்த மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதில் துளி பயனுமில்லை. அது சரியுமில்லை. அது அறிவார்ந்த செயலுமில்லை.

துளியும் உண்மையில்லை

துளியும் உண்மையில்லை

தினகரன் வாங்கிய ஓட்டில், தேமுதிக மற்றும் இஸ்லாமிய அமைப்பு ஓட்டும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். கோவில்பட்டியில் தினகரனை எதிர்த்து கடம்பூர் ராஜூ எப்படி செயல்பட்டு ஜெயித்தாரோ, அப்படி செயல்பட்டு தான் ஜெயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி தொகுதியில், கடம்பூர்ராஜு 68 ஆயிரம் தினகரன் 56 ஆயிரம், திமுக - கம்யூ - 37 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினர். தினகரன் பிரிந்ததால் அதிமுக தோற்றது என்பது ஆதாரமில்லாதது. அது ஒரு பிம்பம். அவ்வளவே. துளி உண்மையில்லை." என கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+