Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேடை ஏறிய போது ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கத்தை அசிங்கப்படுத்திய இபிஎஸ் தரப்பு.. பெரும் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டத்தின் விழா மேடையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கீழே இறக்கிவிடப்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Recommended Video

    அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.7.2022 அன்று நடைபெறும்

    பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுக் குழு கூட்டம் ஒரு வழியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு சொல்வோம் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு நேற்று ஒரு வெளிச்சம் மேல்முறையீட்டு மனு மூலம் தெரிந்தது. இதையடுத்து உற்சாகமாக ஓபிஎஸ் பிரச்சார வேனில் வந்தார்.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    அப்போது அவரது வாகனத்தை உள்ளே விடாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் எழுப்பினர். மேலும் ஓபிஎஸ் துரோகி என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் பாராமல் ஓபிஎஸ்ஸையே வெளியேறுமாறு கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

    கோஷம்

    கோஷம்

    அது போல் ஓபிஎஸ் வரும் போது எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்ற கோஷங்களும் ஏற்பட்டது. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொதுக் குழுவுக்கு வந்த போது அவரை சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, வளர்மதி உள்ளிட்டோர் அவரை கண்டுகொள்ளாமலும் வரவேற்காமலும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவமானம்

    அவமானம்

    இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கமும் ஜேசிடி பிரபாகரனும் மேடை ஏறினர். அப்போது அவர்களை மேடையை விட்டு கீழே இறங்குமாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி அவர்களை கீழே இறக்கி அவமானப்படுத்தினர். சுருக்கமாக சொல்ல போனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களை வேண்டாத பிள்ளை போல் நடத்துவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    பொதுக் குழு நடக்குமா

    பொதுக் குழு நடக்குமா

    காலை 10 மணிக்கு அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில ஒன்றரை மணி நேரமாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுக் குழு கூட்டம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+