ஆர்ப்பரித்த அதிமுக பொதுக்குழு! ஓ.பன்னீர்செல்வம் ஒழிக என கோஷம்! அமைதிப்படுத்திய மாஜி மந்திரி வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் ஒழிக என முழக்கங்கள் எழுப்பப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்ப்பரித்த நிலையில், முன்னாள் அமைச்சர் சரோஜா ஓடோடி வந்து மைக்கை பிடித்துப்பேசி அவர்களை அமைதிப்படுத்தினார்.
சரோஜா மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருக்காவிட்டால் அங்கு இருதரப்பினர் இடையே பெரும் அடிதடியே உருவாகியிருக்கக் கூடும்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு மேடையில் ஓ.பன்னீர்செல்வம் ஏறியவுடன் அலைகடலென ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டார்கள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள். ஓ.பன்னீர்செல்வம் ஒழிக என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ஆனாலும் இதற்கெல்லாம் அசராமல் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் ஓ.பன்னீர்செல்வம் மேடையில் கம்பீரமாக ஏறினார்.

மாஜி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான பொதுக்குழு உறுப்பினர்களின் கோஷத்தை பல முன்னாள் அமைச்சர்களும் ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்த சூழலில், மனம் கேட்காமல் ஓடோடி வந்து மைக்கை பிடித்துப் பேசிய மாஜி அமைச்சர் வளர்மதி, நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும், இதனால் அமைதி காக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி சவுண்டு விட்டார் சரோஜா.

ஒழிக கோஷம்
இதையடுத்து நிலைமை கொஞ்சம் சுமூகமானது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்துக்கொண்டு தான் இருந்தன. தன்னை ஒழிக என கோஷமிடுவார்கள் என்பதை முன்கூட்டியே ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்து வந்ததை போல் முகத்தில் எந்த சலனத்தையும் வெளிப்படுத்தாமல் தில்லாக மேடையில் அமர்ந்திருந்தார்.

போட்டி முழக்கம்
உங்களுக்கு மட்டும் தான் முழக்கம் எழுப்பத் தெரியுமா, நாங்களும் முழக்கம் எழுப்புவோம் எனக் கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் முழக்கங்கள் எழுப்பினர். இவ்வாறு மாறி மாறி போட்டி முழக்கங்கள் எழுப்பியதால் வைகைச்செல்வன் அவர்களை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!











Click it and Unblock the Notifications