சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள்.. ஒன்றரை ஆண்டில் 10% கூட நிரப்பவில்லை.. திமுக மீது பாயும் ஓபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டில் காலி பணியிடங்களில் 10 சதவிகிதம் கூட நிரப்பவில்லை என்று விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண். 486-ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு அடியும் கவனம்..சிதம்பரம் கோவிலில் தவறு நடந்தால் அதிகாரத்தை பயன்படுத்துவோம் - சேகர் பாபு ஒவ்வொரு அடியும் கவனம்..சிதம்பரம் கோவிலில் தவறு நடந்தால் அதிகாரத்தை பயன்படுத்துவோம் - சேகர் பாபு

ஆனால், இந்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியினை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், வாக்குறுதியில் உள்ள 10% காலிப் பணியிடங்களைக் கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் சென்ற ஆண்டு குரூப் 2 மற்றும் 2 A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த நேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர். இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து லட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பிரதானத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது.

தேர்வு எழுதியவர்கள் கருத்து

தேர்வு எழுதியவர்கள் கருத்து

இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர்.

மதிப்பெண் விவரம் எங்கே?

மதிப்பெண் விவரம் எங்கே?

தற்போதைய குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை. ஒருவேளை, முதல் நிலைத் தேர்வு என்பதால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை. இதன் காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பிரதானத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

தேர்வர்கள் சந்தேகம்

தேர்வர்கள் சந்தேகம்

இது மட்டுமல்லாமல், அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் தங்களுக்கு ஓர் அடிப்படையாக அமையும் என்றும் தேர்வு எழுதியவர்கள் கருதுகிறார்கள். மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பெண் விவரம் வெளியிடுக

மதிப்பெண் விவரம் வெளியிடுக

எந்தத் தேர்வாக இருந்தாலும், அதில் வெளிப்படைத் தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதிய ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை வெளியிடுவதுதான் பொருத்தமான ஒன்று என்பது அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

ஓபிஎஸ் கோரிக்கை

ஓபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வில் தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்களை வெளியிடத் தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதன் மதிப்பெண்களை ஒளிவுமறைவின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
O Panneer Selvam has emphasized that transparency should be observed in the examination results published by the Tamil Nadu Public Service Commission. He has also criticized that even 10 percent of vacant posts have not been filled in one and a half years after coming to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X