பையனுக்கு ஓட்ட பைக் தரும் பெற்றோரே உஷார்! சாலையில் பறிபோன மகனின் உயிர்! தந்தைக்கு வந்த சிக்கல்!
சென்னை: சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத மகனுக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி அளித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் வாக்கின் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் தீபக் பாலாஜி. இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
தீபக் பாலாஜியின் நண்பரான திரு.வி.க. நகரைச் சேர்ந்த லோகேஷ், லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நண்பருடன் பயணம்
இந்நிலையில், தீபக் பாலாஜி, தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில், தனது நண்பரான லோகேஷுடன், கடந்த 26-ம் தேதி, அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் எடுக்காதது மற்றும் சரியான பயிற்சி இல்லாததால், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

கல்லூரி மாணவர் உயிரிழப்பு
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த லோகேஷ் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தீபக் பாலாஜிக்கு, லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற வந்து வந்த லோகேஷ், மூளை சாவு அடைந்து, கடந்த மாதம் 6-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சொல்லொண்ணா துயரம் அடைந்த அவரது பெற்றோர், லோகேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தனர்.

போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தீபக் பாலாஜி, 18 வயது நிரம்பாதவர் என்றும், இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமமும் இல்லாமல் விதிமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலைக்கவசம் அணியாமல் பயணித்ததும் விசாரணையில் அம்பலமானது. சரியான பயிற்சி இல்லாமல் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

மாணவரின் தந்தை கைது
இதனையடுத்து, 18 வயது நிரம்பாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத தனது மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி அளித்த தீபக் பாலாஜியின் தந்தை சுப்பிரமணி மீது திருமங்கலம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுப்பிரமணியை நேற்று கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications