வாடகை வீட்டில் அழகான பெண்.. சினிமா போட்டோ ஷூட் எடுத்து, தங்க நகையை அள்ளிய சென்னை பிசியோதெரபி டாக்டர்
சென்னைh: திரைத்துறையின் மின்னொளி வெளிச்சம் இன்றும் பல இளம் பெண்களை ஒரு மாயவலைக்குள் கட்டி போட்டுள்ளது.. தகுந்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், மாடலிங் மற்றும் சினிமா கனவுகளுடன் வலம் வரும் மாணவிகள் சில போலி நபர்களின் நயவஞ்சக பேச்சில் சிக்கி தவிக்கின்றனர்.. அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவி, திருட்டு ஆசாமி ஒருவரிடம் சிக்கிவிட்டார்.. என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம் கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர் ரகுராஜ்.. இவரது வீட்டில், கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், அவரது மனைவி கீதா மற்றும் 17 வயது மகள் ஆகியோர் வாடகைக்குக் குடிவந்தனர்..

தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஜெகதீஷ், ரகுராஜின் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாகப் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்..
அழகான கல்லூரி மாணவி
ரகுராஜின் மகள் புனிதாஸ்ரீ 22 வயதுடைய கல்லூரி மாணவி என்பதால், அவர் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்குச் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளைத் தன்னால் பெற்றுத்தர முடியும் என்றும் ஜெகதீஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.. தனக்கு சினிமாவில் பெரிய மனிதர்கள் பலரைத் தெரியும் என்றும், அதற்கு முன்பாக ஒரு தரமான போட்டோ ஷூட் நடத்தி மாடலிங் துறையில் அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் நம்ப வைத்துள்ளார்..
சென்னையில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்குத் தான் சிறப்பு விருந்தினராக போக இருப்பதாகவும், அப்போது மாணவியையும் அழைத்து சென்றால் மாடலிங் போட்டோக்களை எடுத்துவிடலாம் என்றும் ஜெகதீஷ் ஒரு திட்டத்தைப் போட்டுள்ளார்..
புது டிரஸ் - தங்க நகைகள்
இதை நம்பிய ரகுராஜ், தனது மகள் மற்றும் மகனை கடந்த 16-ம் தேதி ஜெகதீஷ் குடும்பத்தாருடன் கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.. சென்னை வந்த அவர்கள் மெரினா கடற்கரையை சுற்றிப் பார்த்த பிறகு, ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர்..
அங்கு பல்வேறு உடைகளில் மாணவியைப் போட்டோ எடுத்த ஜெகதீஷ், ஒரு புது டிரஸ்ஸை கொடுத்து இதை அணிந்து போட்டோ எடுக்கும்போது நகைகள் எதுவும் உடம்பில் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார்.. இதை உண்மை என்று நம்பிய புனிதாஸ்ரீ, தான் அணிந்திருந்த 2 ஆரம், ஒரு செயின், மோதிரம் மற்றும் கம்மல் என மொத்தம் 16 சவரன் நகைகளைக் கழற்றி ஜெகதீஷிடம் கொடுத்துள்ளார்..

உடை மாற்ற சென்ற மாணவி
மாணவி உடை மாற்ற சென்ற அந்தச் சில நிமிட இடைவெளியில், ஜெகதீஷ் தனது மகள் மற்றும் மனைவியுடன் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாராம்.. நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது அப்பாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உள்ளார்.. பிறகு உடனடியாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜெகதீஷ் ஏற்கனவே பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டியுள்ள ஒரு கைதேர்ந்த திருடன் என்பது தெரியவந்தது.. அவர் கோவை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் பொறியாளர் மற்றும் மருத்துவர் எனப் பல்வேறு வேடங்களில் நடித்து, குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களிடமே 50 சவரன் வரை நகைகளைத் திருடியுள்ள வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமானது..
16 சவரன் தங்க நகை
செல்போன் சிக்னல் மற்றும் கார் பதிவு எண்ணை வைத்துத் துப்பு துலக்கிய போலீசார், கொளத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜெகதீஷ் மற்றும் அவரது 17 வயது மகளைக் கைது செய்தனர்..
திருடிய நகைகளை விற்று இந்தியா முழுவதும் பைக்கிலேயே உல்லாசமாகச் சுற்றி வந்த ஜெகதீஷிடம் இருந்து 16 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.. தற்போது தப்பியோடிய அவரது மனைவி கீதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.. ஒரு குடும்பமே சேர்ந்து திட்டமிட்டு நடத்திய இந்த நூதனத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications