மூச்சுக் குழாயுடன் மனைவி.. கையில் சிலிண்டர்: முதுமையிலும் குறையாத காதலால் உலகையே வியக்க வைத்த கணவர்
சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு முதிய தம்பதியின் அன்பும், பக்தியும் கலந்த செயல் இப்போது பலரையும் நெகிழச் செய்து வருகிறது... முதுமையிலும் குறையாத இவர்களது மாறாத அன்பையும், மனைவியின் பக்திக்காக கணவர் எடுத்த இந்த மகத்தான முயற்சியையும் நெட்டிசன்கள் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.. அப்படியென்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்??
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகாவில் உள்ளது சின்சோடி கிராமம்.. இதை சின்சலி என்றும் சொல்வார்கள்..

உலகம் வியந்த கணவரின் அன்பு
இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாயக்கா தேவி கோவில் ஒன்று உள்ளது.. இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.. இந்த திருவிழாவிற்கு கர்நாடகா மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்..
அந்தவகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயியும், இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.. இந்த திருவிழாவுக்கு தொடர்ந்து 15 வருடங்களாக தன்னுடைய மனைவியை அழைத்து வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார்..
மூக்கில் குழாயுடன் மனைவி
அந்தவகையில், இந்த ஆண்டும் கோயில் திருவிழாவுக்கு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர்.. ஆனால், கடந்த சில மாதங்களாகவே விவசாயியின் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று.. கடுமையான நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்..
அவரால் சுவாசிக்கவும் முடியவில்லை.. அதனால் வீட்டிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியால்தான் சுவாசித்து வருகிறார்.. இதனால் வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.. எனினும் மாயக்கா தேவியை இந்த ஆண்டு தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மனைவியை வாட்டி வந்துள்ளது.
"எப்படியாவது மாயக்கா தேவி கோயிலுக்கு என்னை அழைத்து செல்லுங்கள்" என்று கணவரிடம் தனது விருப்பத்தை சொன்னாராம் மனைவி..
ஆக்ஸிஜன் சிலிண்டர்
இதையடுத்து மனைவியின் ஆசையை நிறைவேற்ற கணவரும் முடிவு செய்தார். உடனடியாக இதுகுறித்து டாக்டரை சந்தித்து, அதற்குரிய ஆலோசனையை பெற்றார். சில பாதுகாப்பு அறிவுறுத்தல்களை டாக்டர் வழங்கியதன் அடிப்படையில், ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மனைவியை அழைத்து சென்று தரிசனம் செய்யலாம் என்றும் முடிவெடுத்தார்..
எனவே இதற்கெனவே ஆக்ஸிஜன் சிலிண்டரை தயார் செய்து கொண்டு, மனைவியையும் அழைத்து கொண்டு மாயக்கா தேவி கோவிலுக்கு வந்தார்.
கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில், ஒரு கையில் மனைவியின் கையை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் கனமான ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்தபடி, அவர் மெதுவாக தளர்ந்து நடந்து சென்ற காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.
நெகிழ வைத்த முதிய தம்பதி
மனைவி செல்லும் இடமெல்லாம் ஆக்ஸிஜன் சிலிண்டரை பின்னாடியே தூக்கி சென்றுள்ளார்.. இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் தாமாகவே வழிவிட்டு, இந்த முதிய தம்பதி எளிதாக தரிசனம் செய்ய உதவியிருக்கிறார்கள்..
சிலர் இந்த நெகிழ்ச்சி காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டனர்.. அந்த வீடியோதான் தற்போது வைரலாகி, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தரிசனம் முடிந்த பிறகு, அந்த முதியவர் சொல்லும்போது, தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் என்னுடைய மனைவி இப்போது மனதளவிலும் உடலளவிலும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்.. மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது என்னுடைய கடமை" என்கிறார்..
அன்பின் அடையாளம்
மனைவியின் உடல்நிலை சரியில்லை என்று அவரை வீட்டிலேயே இருக்க சொல்ல அந்த முதியவருக்கு தோன்றவில்லை... லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் எப்படி அழைத்து செல்வது என்றும் யோசிக்கவில்லை.
ஆக்ஸிஜன் குழாய் மூக்கில் பொருத்தப்பட்ட நிலையில், மிகவும் சிரமப்பட்டு நடந்த அந்தப் பெண்ணுக்குத் துணையாக, ஒரு மலையைப் போல அந்த முதியவர் நின்றது, காண்போரை நெகிழ வைத்துள்ளது.. எத்தனையோ தடைகள் இருந்தும், தன் மனைவியின் முகத்தில் ஒரு புன்னகையை பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த முதியவர் எடுத்த முயற்சி உண்மையான அன்பின் அடையாளமாகும்...!!!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications