வெளுக்கும் "இலை".. "நழுவும் தலை".. ஓஹோ இதான் டீலா.. "அந்த ஒரு நிமிடம்".. திணறிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவை விட்டுத்தர ஓபிஎஸ் தயாராக இல்லை
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி சென்றுவிடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் தீவிரமாக இருந்து வரும் நிலையில், அதுகுறித்த தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரபத்து வருகின்றன.
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. இது தொடர்பாக எடப்பாடி டீம் ஒரு பக்கமும், ஓபிஎஸ் டீம் மறுபக்கமும் தனித்தனியாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
இரட்டை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் பேச்சு, அவ்வளவாக கட்சிக்குள் எடுபடாத நிலைமை உள்ளது.

சீக்ரெட் டீல்
இதனிடையே ஒரு சீக்ரெட் டீல் ஒன்றினை, எடப்பாடி டீம் ஓபிஎஸ் தரப்பிடம் பேசி வருவதாக செய்திகள் கசிந்தன.. அதாவது, "இந்த முறை எடப்பாடிக்கே சீட்டை விட்டுத்தந்துவிடுங்கள்.. இப்போதைய சூழலில், கட்சி நிர்வாகிகள் அவர் பக்கம்தான் நிறைய உள்ளனர்.. சட்டசபை தேர்தலில் நிறைய எம்எல்ஏக்களை பெற்று தந்துள்ளது தென்மண்டலங்கள்தான்.. கொங்குவையும் தாண்டி, தென்மண்டலங்களிலும் எடப்பாடிக்கான ஆதரவு உள்ளது.. 80 சதவீதத்துக்கும் மேல் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர்.. 4 வருட ஆட்சியில் பெரிதாக சர்ச்சையில் சிக்காமல், நல்ல பெயரை பெற்றுள்ளார்..

பிளஸ் பாயிண்ட்
இப்படிப்பட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் உள்ளவர் கையில் கட்சி தலைமையை தந்தால்தான், அது எடுபடும்.. திமுக போன்ற கட்சிகளையும் சமாளிக்க முடியும்.. ஒருவேளை, யாருக்கு ஆதரவு என்ற வாக்கெடுப்பை, கையில் எடுத்துவிட்டால், உங்களுக்குதான் ஓட்டுக்குள் குறைவாக விழும்.. இதனால், இருக்கும் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.. அந்த அளவுக்கு போகாமல், எடப்பாடியையே தலைவராக இருக்க வழிவிடுங்கள்.. உங்கள் மகனுக்கு டெல்லியில் சீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கட்சி பார்த்து கொள்ளும்" என்று பேசினார்களாம்.. ஆனால், ஓபிஎஸ் அதற்கு கறாராக மறுத்துவிட்டாராம்.

எடப்பாடி பழனிசாமி
இப்படிப்பட்ட சூழலில், ஒரு தனியார் டிவி சேனலில் ஓபிஎஸ் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அதில், நெறியாளர் கேட்ட கேள்வி இதுதான்: "ஒற்றை தலைமை வேண்டும் என்றுதானே அவங்க சொல்றாங்க.. ஆனால், அவங்க யார் பெயரையும், பழனிசாமியா? பன்னீர்செல்வமா? அல்லது வேற யாராவதா? என்று குறிப்பிட்டு எதுவுமே சொல்லியே" என்று கேட்டார்.. அதற்கு ஓபிஎஸ்.. "இப்போதைக்கு இது தேவையில்லாத கருத்து.. 2 மாதத்துக்கு முன்னாடிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்று கழக அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.. அப்படி இருக்கும்போது, இந்த பேச்சு இப்போது தேவையா? என்பதே என் கேள்வி" என்றார்.

ஜனநாயகம்
உடனே நெறியாளர், "இரட்டை தலைமை நல்லாதான் போய்ட்டு இருக்குன்னு சொல்றீங்க.,,. அப்படின்னா இரட்டை தலைமையில் இதுநாள்வரை, எந்த பிரச்சனையும் உங்களுக்குள் இருந்ததே இல்லையா? உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, ஒற்றை தலைமை என்ற பேச்சு வந்தவுடனேயே, பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தான் நிற்கிறார்கள், உங்களுக்கு குறைவான ஆதரவு மட்டுமே இருக்கிறது என்று ஒரு பேச்சு இருக்கு.. இப்போ நீங்களே சொல்றீங்க, ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் அதை முடிவு செய்யணும்னு சொல்றீங்க.. அப்படி இருக்கும்போது, தேர்தலை நடத்துங்களேன்.. யார் யாருக்கு விருப்பமோ, இந்த தேர்தலில் நிற்கட்டும்.. ஒன்றரை கோடி தொண்டர்களே முடிவு செய்யட்டுமே? அப்படி ஒரு போட்டிக்கு நீங்க தயாரா இருக்கீங்களா? அப்படி தேர்தல் முறைதானே ஜனநாயகம்? என்று கேட்டார்..

கசப்புணர்வு
இந்த கேள்வியை ஓபிஎஸ் எதிர்பார்க்கவேயில்லை.. ஒரு நிமிடம் திணறிவிட்டார்.. அமைதியாக இருந்தார்.. பிறகு சிரித்து சுதாரித்துக் கொண்டே, "இப்படி யூகமான கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. பொதுவாகவே கட்சிக்குள் போட்டி இருக்க கூடாது.. தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நடத்தி, கசப்புணர்வை கட்சிக்குள் கொண்டுவர கூடாது.. யாராக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஏகமனதாக இருக்ககூடிய தலைவரை கொண்டு வரவேண்டும் என்பதே என் கருத்து.. " என்றார்.

முணுமுணுப்புகள்
ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கள் மீண்டும் விவாதங்களை கிளப்பி விட்டு வருகின்றன.. நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில், பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்.. இப்படி சொல்வதே ஒரு கட்சி தலைமைக்கு பலவீனம்தான்.. மேலும், தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம், அவர்களுக்காகதான் அனைத்தையும் பொறுமையாக விட்டுக்கொடுத்து வருகிறேன் என்றும் அன்றைய தினம் ஓபிஎஸ் சொல்லி இருந்தார்.

சம்மதமா?
எதற்காக தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறார்? அல்லது உண்மையிலேயே அவருக்கு ஆதரவுகள் கட்சிக்குள் குறைவாக உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. தொண்டர்கள் தேர்தல் என்றாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை, கட்சிக்குள் நிர்வாகிகளே ஓட்டுப்போட்டு தேர்வு செய்யட்டும் என்றாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை.. எதற்குமே வழிவிடாமல் இருக்கிறார் என்றால், இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்ற முணுமுணுப்புகள் எழுந்துள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications