சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

+2 தேர்வு ரிசல்ட் எப்போது வெளியாகுது தெரியுமா.. பறந்து வந்த முக்கிய அறிவிப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த மூன்று வாரங்களாக நடந்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது.. இதையடுத்து, ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, இன்றைய தினம் அதாவது, ஏப்ரல் 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.

முன்னதாக, இந்த பொதுத் தேர்விற்கு 8.5 லட்சம் (8,51,303) மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 8.01 (8,01,744) லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர்.

 பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை ஆர்டர்! பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை ஆர்டர்!

ரிசல்ட்ஸ்

ரிசல்ட்ஸ்

சரியாக, 49,559 மாணவர்கள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல, தனித்தேர்வர்களில் மொத்தம் 8,901 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,786 மாணவர்கள் தேர்வெழுதினர். 1,115 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் என்று, 8.75 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சராசரியாக, 50 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல், ஆப்சென்ட் ஆனது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அத்துடன், இந்த விவகாரம், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அரசியல் ரீதியாகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது..

மாணவர்கள்

மாணவர்கள்

இதனிடையே, வரும் ஜுன் மாத தேர்வு அல்லது அக்டோபரில் மறுபடியும் துணை தேர்வு நடத்தி, இடைநிற்றல் ஆனவர்களை, தேர்வு எழுத வைப்பதற்காக, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.. அதாவது, வராத மாணவர்களை கண்டறிந்து வரும் ஜுன் மாதம் வரக்கூடிய துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர் தேர்வுக்கு மட்டும் வராமல் இருந்தால் அவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து வரக்கூடிய நாட்களில் இதர பாடங்களை பொதுத்தேர்வு எழுத வைக்கவும், நீண்ட நாள் வராமல் உள்ள மாணவர்களையும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

 ரிசல்ட் எப்போது

ரிசல்ட் எப்போது

கடந்த வாரம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியானது.. அதன்படி, விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தகூடாது, அப்படி பயன்படுத்தினால், ஆசிரியர்களின் கவனம் சிதறக்கூடும், விடைத்தாள்களை திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், உணவு உண்பதற்காக விடைத்தாள் திருத்தும் மையத்தை விட்டு வீட்டுக்கோ, உணவகத்திற்கோ சென்று வருவது சிறந்த நடத்தையல்ல என்றெல்லாம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது... இன்று, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுகள் இன்று முடிவதால், ஒரு வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்க உள்ளது.. அதற்குபிறகு, மே மாதம், இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வியின் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2வது வாரத்திலேயே ரிசல்ட் வர உள்ளதால், மாணவ - மாணவிகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Huge expectation and When will the Plus 2 exam results be released: +2 result
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X