"எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்” - விஜய்
கோலாலம்பூர்: "எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்" என ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியுள்ளார். "யார் யாரை எந்த இடத்துல வைக்கணும்னு மக்களுக்கு தெரியும் அவங்க பார்த்துப்பாங்க" என விஜய் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய விஜய், எனக்காக எல்லாரையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டு கொடுக்கிறேன் என்று விஜய் பேசியுள்ளார்.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், பொங்கல் பண்டிகையை ரிலீசாக வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
விஜய் விழா அரங்கிற்கு நீல நிற கோட் சூட்டில் ஸ்டைலாக என்டரி கொடுத்தார். விஜயை பார்த்து அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர். விழாவின் சிகரமாக, படத்தின் நாயகன் விஜய் பேசினார்.
ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "இலங்கைக்குப் பிறகு, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். இங்கு படமாக்கப்பட்ட சில தமிழ் படங்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்க தான் எடுத்தாங்க, என்னுடைய. காவலன், குருவி போன்ற எனது படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது.
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது, இந்தத் துறையில் ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையைக் கொடுத்திருக்கிறீர்கள்." எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய விஜய், "எனது திரைப்பட வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே நான் எல்லா வகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். 33 ஆண்டுகளாக ஆதரவாக இருப்பது எளிதல்ல, ஆனால் என் ரசிகர்கள் அதை எனக்குச் செய்தார்கள். நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அவங்களுக்காக அடுத்த 30-33 வருடத்திற்கு அவங்களுக்காக நிற்க போறேன்" என்றார்.
-
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications