ஆட்டிடியூட் காட்டும் தொலைந்த நடிகர்கள்? பார்த்திபன், சேரன் போல சினிமாவில் இறங்கி அடிக்கணும்: பிரபலம்
சென்னை: கொடி கட்டி பறந்த முன்னணி நடிகர்கள் பலர் இன்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறார்கள்.. ஷ்யாம், ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஆர்யா போன்ற நடிகர்கள் ஆரம்பத்தில் மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்தாலும், பின்னர் அவர்களின் மார்க்கெட் சரிந்ததற்கு காரணம் சரியான கதை தேர்வுகள் இல்லாததே என்று இயக்குனர் பாரதி மோகன் விரிவாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதை பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாரதி மோகன், "சினிமாவில் தொலைந்து போனவர்கள், மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை

பெரிய சம்பளம், ஆக்ஷன் பட ஆசையே காரணம்
நடிகர்களுக்கு திறமை இருந்தால் ஒரு முழு படத்தில் நடிக்க வேண்டிய அவசியமில்லை, சில காட்சிகள் வந்தாலே போதும்.. இதற்கு உதாரணம்தான் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் நடித்தது.
நடிகர் ஷ்யாம் 'இயற்கை', '12B' போன்ற படங்களில் மிக அழகாக இருந்தாலும், அவர் எப்படி காணாமல் போனார் என்று தெரியவில்லை.. அதேபோல நடிகர் ஸ்ரீகாந்த் ஆரம்பத்தில் வரிசையாக ஹிட் கொடுத்தாலும், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற 'ஆதாரம்' படத்தில் முயற்சித்தார்.. அத்துடன் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது..
பெரிய ஸ்டார் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்தை பொறுத்தவரை, அஜித், விஜய்க்கு முன்பே பெரிய ஸ்டாராக இருந்தவர்.. பெரிய பிசினஸ் அவருக்கு இருந்தது. கார்த்திக் போல ஒரு சிறந்த ஹீரோ.. தியாகராஜன் சாரால்தான் பல வித்தியாசமான கேரக்டர்கள் பிரசாந்த்துக்கு கிடைத்தன.. ஆனாலும் ஒரு கட்டத்தில் பிரசாந்த் தன்னுடைய கேரக்டர்களைத் தானே முன்னின்று வடிவமைக்க தவறிவிட்டார்.. இயக்குனர்களை மட்டுமே நம்பி இருந்தார்..
ஆர்யா மற்றும் விதார்த் போன்ற நடிகர்கள் புதிய இயக்குனர்களுடன் இணைந்து மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.. இன்றைய நடிகர்கள் தங்களைச் சுற்றி ஒரு பெரிய திரையை போட்டுக் கொள்கிறார்கள்.. எளிமையாகப் பழக தவறுகிறார்கள்.. இந்த ஆட்டிடியூட் காரணமாகவே பல வாய்ப்புகளை இழக்கிறார்கள்..
சிம்புவிடம் இல்லாத திறமையா
நடிகர் சிம்புவிடம் இல்லாத திறமையே கிடையாது, அவர் ஒரு "வெர்சடைல் ஆர்டிஸ்ட்".. ஆனால் அவரது படங்கள் "ஸ்லீப்பிங் மூட்"லேயே உள்ளது.. பல படங்களில் அவரால் நடிக்க முடியும்.. ஆனால் தற்கால இளைஞர்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்..
நடிகர் விக்ரம் ஒரு சிறந்த உதாரணம்.. கமல் சாருக்கு அடுத்து நடிப்பிற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் விக்ரம் மட்டுமே.. அதனால்தான் அவரது மார்க்கெட் இன்றும் நிலைத்து நிற்கிறது..
பார்த்திபன், சேரன்
எனவே தொலைந்து போன நடிகர்கள் தங்களது முகவரியை திரும்பப் பெற வேண்டுமானால் வில்லன் வேடம் அல்லது கேரக்டர் வேடங்களில் நடிக்க தயங்க கூடாது.. விஜய் சேதுபதி, ஜெயம் ரவி போன்றோரெல்லாம் அப்படித்தானே இன்று மாறியிருக்கிறார்கள்?
'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் வெறும் சீனில் மட்டுமே வந்து தானே மக்களின் கவனத்தை ஈர்த்தார்?
பார்த்திபன் எந்த கேரக்டரிலும் நடிக்கிறாரே? சேரன் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்றும்கூட ஏதோ ஒரு வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்களே?
அதனால் மார்க்கெட் இழந்த நடிகர்கள் இன்றும் பழைய சம்பளத்தையே எதிர்பார்க்காமல், தங்கள் இருப்பை திரையில் காட்ட வேண்டும்.. தொலைந்து போன நடிகர்கள் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வரவேண்டும், மக்களுடன் மக்களாக சேர வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications