கொரோனா.. தமிழகத்தில் ஊரடங்கு என தீயாய் பரவும் தகவல்.. நறுக் பதில் சொன்ன டாக்டர் ராதாகிருஷ்ணன்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அச்சப்பட வேண்டிய நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,
கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்றார். தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 1.48 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று கூறினார்.

லாக்டவுன் வதந்தி
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை. தொற்று பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை. அக்கறைப்பட வேண்டிய நேரத்தில் உள்ளோம்.

அலட்சியம் வேண்டாம்
கொரோனா பரவல் இல்லாவிட்டாலும் மக்கள் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் தொடர்ந்து அணிந்து வரவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Recommended Video

மாஸ்க் அணிவது கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications