சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி உணவு மட்டுமல்ல.. மேரேஜ் ஹாலும் டெலிவரி பண்ணுவாங்களாம்! எங்கேயும் போக வேண்டாம்! அட புதுசா இருக்கே

Google Oneindia Tamil News

சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு எல்லாமும் மனிதனின் கைக்குள் அடங்கி விட்டதாக தோன்றுகிறது. உணவு டெலிவரி, இதர பொருட்கள் டெலிவரி என்கிற வரிசையில் தற்போது திருமண மண்டபமும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

இது நீங்கள் நினைப்பதை போல் அல்ல. மொபைல் ஏடிஎம் போல மொபைல் திருமண மண்டபங்கள் வந்திருப்பதைதான் டெலிவரி என சொல்கிறேன்.

நாம் நினைத்த இடத்திற்கு இதனை கொண்டு செல்ல முடியும். இதில் தோராயமாக 30-40 வரை அமர முடியும் என்பதால் மக்களின் கவனம் தற்போது இதன் பக்கம் திரும்பியுள்ளது.

இப்படி எல்லாம் வரும்னு கனவுல கூட நினைச்சது இல்ல... அறந்தாங்கி நிஷா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவுஇப்படி எல்லாம் வரும்னு கனவுல கூட நினைச்சது இல்ல... அறந்தாங்கி நிஷா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

மொபைல் திருமண மண்டபம்

மொபைல் திருமண மண்டபம்

அனேநகமாக மொபைல் போன் வந்த பின்னர் மேற்குறிப்பிட்டதைப்போல இந்த உலகமே நமது கையில் சுருங்கிவிட்டதை போல தோன்றுகிறது. இந்த மொபைல் போன் மூலம் பல விஷயங்களை நம்மால் ஒரே இடத்திலிருந்து செய்துவிட முடிகிறது. குறிப்பாக, பண பரிவர்த்தனைகள், தொடர்பு கொள்வது, தகவல்களை அனுப்புவது, அதை காட்சி/ஒலி வடிவிலும் அனுப்ப முடிகிறது. இது நேரத்தை சேமிக்க உதவுகிறது. அந்த வகையில் மொபைல் திருமண மண்டபங்கள் வந்துள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

உண்மையில் இந்த மண்டபத்திற்கும் மொபைலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் எங்க சென்றாலும் அதை நம்மால் உடன் கொண்டு செல்ல முடியும் என்பதால் இதற்கு மொபைல் மேரேஜ் ஹால் என பெயர் வந்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போதுதான் இந்த மொபைல் திருமண மண்டபங்கள் அறிமுகமாகின.

சாமானிய மக்களுக்காக

சாமானிய மக்களுக்காக

மட்டுமல்லாது, கொரோனா தொற்று பல குடும்பங்களை பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டி நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நெருக்கடியும் இது போன்ற மொபைல் திருமண மண்டபங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. இது குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

30-40 பேர் வரை

30-40 பேர் வரை

கொரோனா தொற்று இது போன்ற இன்னும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். இதுபோன்று மேலை நாடுகளில் ஏற்கெனவே பல அம்சங்கள் இருந்தாலும் இந்தியாவில் தற்போதுதான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கண்டெயனரில் இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த மொபைல் திருமண மண்டபத்தில் தோராயமாக 30-40 வரை அமர முடியும். பார்ப்பதற்கு 10X40 அளவில் இருக்கும் இது விரிவாகினால் 30X40 அளவில் இருக்கும் இந்த மொபைல் திருமண மண்டபம்.

English summary
After the spread of modern technologies everything seems to be within the hands of man. Wedding halls are also being delivered in the order of food delivery and other goods delivery. It's not what you think. I mean delivery as mobile wedding halls have come like mobile ATM. We can take it wherever we want. As it can seat approximately 30-40, people's attention has now turned towards it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X