"காவி" குஷ்பு திமுக பக்கமா.. எகிறியடித்த துணிச்சல்.. மலைத்த திராவிட கட்சிகள்.. கடைசியில் பார்த்தால்?
: பாஜகவில் இருந்து குஷ்பு விலக போவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
சென்னை: குஷ்பு திமுகவுக்கு போக போகிறார் என்று யாரோ கொளுத்திபோட, அந்த வதந்திகளுக்கு மட்டுமல்ல, பாஜகவில் ஒருசிலரின் காழ்ப்புணர்ச்சிக்கும் சேர்த்து குஷ்பு, ட்வீட் போட்டு முடிவுகட்டி உள்ளார்.
குஷ்பு எப்போதுமே எந்த கருத்தையும் வெளிப்படையாகவே சொல்பவர்.. அவர் காங்கிரஸில் இருந்தபோதுகூட, ராகுல் மீதே பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டியவரும் கூட... யாருக்கும் எதற்காகவும் பயப்படாதவர்..
காங்கிரஸில் இருந்தபோதே அவரது துணிச்சலுக்கு பல உதாரணங்கள் உள்ளன.. பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட சமயம் அது..

லெனின் சிலை
இந்தியா முழுக்க சர்ச்சையை இது உருவாக்கி கொண்டிருந்தது.. அப்போது எச்.ராஜா ஒரு பதிவு போட்டிருந்தார்..அதில், "லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.. எச்.ராஜா இப்படி போட்டதுமே கடுமையான எதிர்ப்புகள் நாலாபக்கமும் வந்தது.. உடனடியாக இந்த ட்வீட்டை எச்.ராஜா நீக்கிவிட்டாலும், அப்போது குஷ்பு எச்.ராஜாவை வெளிப்படையாகவே கண்டித்திருந்தார்..

வெள்ளலூர்
"என்னையும் என்னை போன்ற பலரையும் தாண்டி செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை பார்க்கிறேன். உங்கள் நிழல் கூட பெரியார் சிலையை தொட முடியாது என்று பதிவிட்டிருந்தார்.. குஷ்பு காங்கிரஸில் இருந்ததால் பெரியாருக்காக இவ்வாறு பேசினார் என்று கருதப்பட்டது.. இதற்கு பிறகு குஷ்பு பாஜகவுக்கு வந்துவிட்டபோதும், இதேபோல ஒரு சம்பவம் கோவை வெள்ளலூர் பகுதியில் நடந்தது.. அங்குள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை போட்டு, காவி பொடியை தூவி விட்டு சென்றது, தமிழக அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது..

கருணாநிதி
இதற்கும் குஷ்பு ட்வீட் போட்டு கண்டித்தார்.. "இது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறி.. கோழைகள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்... தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுகிறார்.. அவரை நாம் மதிக்க வேண்டும்.. ஆனால் கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்... இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்... பெரியார் சிலைக்கு காவி வண்ணம் தீட்டுவது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும்" என்று பதிவிட்டிருந்தார்.

மணியம்மை
பாஜகவின் தேசிய செயற்குழு - சிறப்பு அழைப்பாளராக இருந்தபோதிலும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால், குஷ்பு தன் ஆதங்கத்தை மறக்காமல் தெரிவித்தது மிகுந்த கவனத்தை ஈர்த்தது.. மணியம்மையாக இவர் பெரியார் படத்தில் நடித்தவர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திராவிட சித்தாந்தத்தை பற்றி குஷ்பு அறிந்து வைத்துள்ளதும், தொடர்ந்து தன்னுடைய துணிச்சலில் உறுதியாக இருப்பதும், பெரியாருக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்காக கொந்தளித்து கண்டிப்பதும், வரவேற்புக்குரிய ஒன்றாக இருந்தது.. இதை பாஜகவும் கவனிக்கவே செய்தது என்பதையும் மறுப்பதற்கில்லை!

காவி நிறம்
இந்த சூழலில்தான், மறுபடியும் பாஜக டென்ஷன் ஆகும் அளவுக்கு அரசியல் செய்து வருகிறார் குஷ்பு.. பில்கிஸ் பானு விவகாரத்தில் குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக சொந்த கட்சியினரே விமர்சிக்கும் சூழலுக்கும் ஆளாகி உள்ளார்.. அந்தப் பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதில் ஈடுபட்ட எந்த மனிதனும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்துக்கும் பெண்மைக்கும் அவமானம். பில்கிஸ் பானோ அல்லது எந்தவொரு பெண்ணுக்கும், அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு ஆதரவு தேவை" என்ற பதிவுகள் பாஜக தலைவர்களின் கவனத்துக்கும் சென்றுள்ளது..

சலசலப்பு
ஏற்கனவே, பாஜகவில் இருந்து குஷ்பு விலக போவதாக, அதிலும் திமுகவுக்கே மறுபடியும் போக போகிறார் என்றெல்லாம் செய்திகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், இந்த ட்வீட்கள் அதற்கு மேல் சலசலப்பை கூட்டின.. எனினும், இன்னொரு பதிவை உடனடியாக குஷ்பு பதிவிட்டார்.. "நான் பாஜகவில் இருந்து விலக போவதாக சொல்கிறார்கள். நான் உண்மையை பேசுவேன். காரணம், நான் பிரதமர் மோடிஜியை நம்புகிறேன். உண்மையை பேசுவதற்கும், என் கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதற்கும் அவர் எனக்கு நம்பிக்கை தருகிறார்" என்று சொல்லி சர்ச்சைக்கு முடிவு கட்டினார். என்றாலும், குஷ்பு பதிவிட்ட ட்வீட்களின் கொதிப்புகள் இன்னும் அடங்கவில்லை.

கடுப்பு + எதிர்ப்பு
மோடியையே டேக் செய்து, அந்த ட்வீட்களை அவர் பதிவிட்டுள்ளதால், இந்த விஷயத்தில் சில பாஜக தலைவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.. யூகங்களையும் குஷ்புக்கு எதிராக கிளப்பிவிட முடியவில்லை.. அதேசமயம், சொந்த கட்சியில் தவறு என்றால், அதை மற்றவர்கள் போல பொறுத்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் போக வேண்டிய அவசியமில்லை என்ற குஷ்புவின் அரசியல், ஒருசிலருக்கு கட்சியில் கடுப்பை தந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதி
இதற்கு நடுவில், இன்னொரு யூடியூப் சேனலுக்கு கடந்த வாரம் குஷ்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், மறைந்த கருணாநிதி பற்றியும், அப்போதைய திமுக பற்றியும், அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்து இருந்தார்.. காங்கிரஸ், பாஜகவுக்கு சென்றபோதும்கூட, கருணாநிதி மீதான மதிப்பை குஷ்பு, வெளிப்படுத்த தவறுவதேயில்லை என்றபோதிலும், அந்த வீடியோவும் மேலிட கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.. இதற்கு தலைவர்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்க போகிறது என்று தெரியவில்லை.. இப்படி, குஷ்புவுக்கு "கட்டம்" கட்ட சிலர் தொடர்ந்து முயன்று வந்தாலும், அனைத்து கட்டங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு, தன் வழியில் சென்று கொண்டேயிருக்கிறார் குஷ்பு..!
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications