நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டர் பெற KYC.. கேஸ் ஏஜென்சியில் மக்களுக்கு ட்விஸ்ட்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சிலிண்டர் பாரம் ஏற்றி வந்த வாகனத்தை துரத்தி சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சிலிண்டரை பெறும் நிலையே ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில், சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் KYC விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டிருக்கிறது. இது புதியது கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களிடம் பயோமெட்ரிக் அல்லது ஆதார் சரிபார்ப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.

ஏன் KYC அவசியம்?
தகுதியுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய கே.ஒய்.சி அப்டேட்டை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதேபோல் ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்திருப்பதைத் தடுக்கவும், முறையற்ற பயன்பாட்டைக் குறைக்கவும் மத்திய அரசு விரும்புகிறது.
இந்த சூழலில் நீண்ட நாட்களாக KYC புதுப்பிக்காத கணக்குகள் 'முடக்கப்பட்ட' நிலைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது. இதனால் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் பலர் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதார் அட்டை மற்றும் எரிவாயு புத்தகத்தை சமர்ப்பித்து கைரேகை பதிவு மூலம் சரிபார்க்கிறார்கள். இந்தியன் ஆயில் , பாரத் கேஸ் அல்லது ஹெச்பி பே போன்ற செயலிகள் மூலம் 'Face Authentication' (முக அடையாளம்) வழியாக வீட்டிலிருந்தே KYC-ஐ முடிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறநது. சில பகுதிகளில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களே இதற்கான இயந்திரத்தைக் கொண்டு வந்து சரிபார்ப்பை செய்து வந்தார்கள்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி
நாமக்கல் மாவட்டத்தில் கே.ஒய்.சி விவரங்கள் புதுப்பிக்காதவர்களுக்கு சிலிண்டர் வழங்க முடியாது என எரிவாயு முகவர்கள் தெரிவித்துள்ளதாவும், பலர் பதிவு செய்திருந்தும் சிலிண்டரை பெற முடியாமல் அவதியடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பல்வேறு எரிவாயு முகவர் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கே.ஒய்.சி அப்டேட் செய்து வருகின்றனர்.
சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இன்று வேலையை விட்டுவிட்டு சிலிண்டர் எடுக்க வந்தால் KYC அப்டேட் என கூறி அலைகழிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications