Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா நொறுங்கும் கணக்கு.. திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறாரா.. நெருடும் வினா

திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி உள்ளது.. அதற்காக 2 விதமான அதிரடிகளையும் கையில் எடுத்துள்ளது.. மற்றொரு புறம், வரப்போகும் எம்பி தேர்தலில் விசிக கூட்டணி குறித்து திருமாவளவன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்..!

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, "திமுகதான் நம்பர் ஒன் எதிரி" என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அதனால்தான் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தினால், இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்" என்று பச்சை கொடி காட்டி நம்பிக்கையை ஏற்கனவே தந்தாராம் அமித்ஷா...

இப்போது விஷயம் என்னவென்றால், எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக சில புதிய வியூகங்களை கணக்கு போட்டு வருகிறது..

திருமா கோபம்

திருமா கோபம்

அதன்படி ஒன்றுதான், வரப்போகும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது.. அதாவது, திமுகவின் கூட்டணியை பலவீனப்படுத்தி, அதன்மூலம் பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது என்பதுதான் அந்த பிளான்.. இப்படி ஒரு திட்டத்தை கடந்த சட்டசபை தேர்தலின்போதே பாஜக எதிர்பார்த்தது.. திமுக எப்படியும் குறைந்த சீட்களை, அதன் கூட்டணிக்கு ஒதுக்கவே செய்யும், அதை நிச்சயம் கூட்டணி கட்சிகள் ஏற்காது, உடனே திமுகவுடன் கூட்டணியை முறித்து கொள்வார்கள் என்று நம்பியது.. ஆனால், திருமாவளவன், குறைந்த சீட்டுக்களை திமுக ஒதுக்கினாலும், மனமுவந்து அதை ஏற்று கொண்டார்.. கூட்டணியையும் வலுப்படுத்தினார்.. வெற்றிக்கும் வித்திட்டார்.. இதை யாராலும் மறுக்க முடியாது.

திருமாவளவன்

திருமாவளவன்

சமீபகாலமாகவே, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள், பாஜகவுக்கு எதிரான மனப்பான்மையில் இருந்தாலும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தையை மறைமுகமாக துவங்கிவிட்டதாக சொல்லப்பட்டாலும், இந்த லிஸ்ட்டில் திருமாவளவனும் இருக்கிறாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.. மத்திய பாஜகவை, திமுக தரப்பு முன்புபோல் பகைத்து கொள்வதில்லை.. இதற்கு மாநில நலன் என்ற விஷயம் காரணமாக இருந்தாலும், பட்டினப்பிரவேசம், கருணாநிதி உருவபடத்தை வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தது, போன்ற காரணங்களினால், விசிகவும் மென்று விழுங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வானகரம்

வானகரம்

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை பாஜக கூட்டணியில் இல்லாத பட்சத்தில், அதிமுகவுடன் விசிகவும் கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.. அதற்கேற்றபடி, திருமாவளவன் போட்ட போஸ்ட் ஒன்று, புது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. "அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது." என்று பதிவிட்டிருந்தார்.

 திருமாவளவன் புலம்பல்

திருமாவளவன் புலம்பல்

அதிமுகவினர் ஏன் திருமாவளவனை சூழ்ந்து கொண்டனர் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.. இந்த குழப்பமே தீராத நிலையில், இன்னொரு கிசுகிசு சம்பவம் வட்டமடிக்கிறது.. 'ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் கடந்த 15ம் தேதி நடந்தது.. இந்த கூட்டத்துக்கு திருமாவை அழைக்கவில்லை.. ஆனால், அடுத்து நடந்த கூட்டத்துக்கு அழைத்திருந்தனர். தேசிய அளவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு இல்லை, திமுகவும் தங்களை தவிர்ப்பதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களிடம் திருமாவளவன் புலம்பினாராம்.. அவர்களும் திருமாவை சமாதானப்படுத்தினார்களாம்.

 புகைச்சல்

புகைச்சல்

ஏற்கனவே, புகைந்து கொண்டிருக்கும் விஷயம், தற்போது லேசாக கசிய ஆரம்பித்துள்ளது.. எனினும், தற்போது வரை, திமுகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் திருமாவளவன்.. பாஜகவின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், அதன் வளர்ச்சியை தடுக்க, இதே திமுக கூட்டணி, அடுத்த தேர்தலிலும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் திருமாவளவன் விடாமல் சொல்லி வருகிறார்.. என்றாலும், கூட்டணிக்குள் சலசலப்புகள், முணுமுணுப்புகள் வெடித்து கொண்டுதான் வருகிறது.. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.. பார்ப்போம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+