அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இனி கட்டணமின்றி ரூ.1 கோடி வரை காப்பீடு.. ஒரே கையெழுத்தில் மெகா சலுகை
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு சலுகைகள் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன. இதன்மூலம் கூடுதல் பலன்களை அரசு ஊழியர்கள் பெற போகிறார்கள்.. இதுகுறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது..!!
வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் வழங்கி வரும் காப்பீட்டுச் சேவைகளின் அவசியத்தை, குறிப்பாக கொரோனா பேரிடருக்கு பிறகு பொதுமக்கள் பலமாக உணர்ந்துள்ளனர்...

இந்த விழிப்புணர்வை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தனது பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் விரிவான ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி 7 முன்னணி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இது தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு - உதயச்சந்திரன் - அரசாணை
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான காப்பீட்டுப் பாதுகாப்புப் பரவலானது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறைச் செயலர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு மே 19ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு, ஒரு கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு கிடைக்கும்.
7 வங்கிகளுடன் ஒப்பந்தம்
இதுதவிர தனிப்பட்ட விபத்து காரணமாக ஊழியர் இறக்கும் பட்சத்தில், ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி சலுகைகளும், திருமணமாகாத மகள்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படும். இந்த வசதிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 7 வங்கிகள் இதுவரை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் இப்போது கூடுதலாக பஞ்சாப் நேஷனல் வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி (டிஎன்எஸ்சி), பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளுடன் இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி மேற்கண்ட 3 வங்கிகளும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மேற்கண்ட சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பலன்கள் - கூடுதல் சலுகைகள்
வழக்கமாக வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காப்பீட்டுச் சேவைகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி அரசு ஊழியர்கள் விரிவான பாதுகாப்பு பலன்களைப் பெறுகிறார்கள் என்பது கூடுதல் விஷயமாகும்..
குறிப்பாக, பணியில் இருக்கும்போது ஊழியர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பெரும் சுமையைக் குறைக்கும் வகையில் குறைந்தது 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடும், விபத்துகளின் போது ஒரு கோடி ரூபாய் வரையிலான தனிநபர் விபத்துக் காப்பீடும் வழங்கப்படுவது மிகப்பெரிய பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.
அரசு ஊழியர்கள் - பணமழை
மேலும், இந்தத் திட்டம் வெறும் நிதி உதவியோடு மட்டும் நின்றுவிடாமல், விபத்து காரணமாக ஒரு ஊழியர் உயிரிழக்க நேரிட்டால் அவரது குழந்தைகளின் வருங்காலத்தையும் கருத்தில் கொள்கிறது.
ஊழியரின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சலுகைகள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இருந்தால் அவர்களின் திருமணத்திற்கான நிதியுதவி போன்ற கூடுதல் பலன்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது ஏற்கனவே கணக்கு வைத்துள்ள வங்கிகள் மூலம் இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான காப்பீட்டு பலன்களை எளிதாகப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications