ஜெகத்ரட்சகன் சொன்ன 30-லும் உதயசூரியன்: திமுகவில் வீசிய புயலால் திகைத்த காங்கிரஸ்? ஒரு விரிவான பார்வை
சென்னை: திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறவு என்பது நீண்டகாலமாகவே ஒருவிதமான "கொடுத்தல்-வாங்குதல்" ரேஞ்சில்தான் இயங்கி வருகிறது.. கடந்த எம்பி தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தக் கூட்டணியில், தற்போது புதுச்சேரி விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.. அதிலும், திமுக மூத்த தலைவர் ஜெகத்ரட்சகன் பேசியிருக்கும் பேச்சு, பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பி விட்டுள்ளது..
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் நேற்றைய தினம் பேசும்போது, "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய ஸ்டாலினின் பெருந்தன்மையை காங்கிரஸ் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்

ஜெகத்ரட்சகன்
திமுகவைப் போல ஒரு நட்பான கூட்டணியை உலகில் எங்கும் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. மாணிக்கம் தாகூரின் விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே கருதத் தேவையில்லை..
கடந்த 2021 தேர்தலிலேயே திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். அப்போது தொகுதிகளுக்காகக் காங்கிரஸார் திமுகவிடம் மன்றாடியதால்தான் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அதனால் திமுகவிற்குப் பாதிப்பு ஏற்பட்டது" என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்..
திமுக காங்கிரஸ் கூட்டணி
ஜெகத் ரட்சகனின் இந்த கருத்துக்களை பார்த்தால், வெறும் தனிப்பட்ட விருப்பமாக தெரியவில்லை; மாறாக, அது திமுகவின் மேலிடத்து எண்ண ஓட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது..
கடந்த சில காலங்களாகவே புதுச்சேரியில் காங்கிரஸ் வலுவிழந்து வருவதாக திமுக கருதுவதும், அங்குள்ள களநிலவரம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக அக்கட்சி நினைப்பதும் இந்த மோதலின் தொடக்கப்புள்ளியாகவே கருத தோன்றுகிறது..
ஜெகத்ரட்சகன் போன்ற ஒரு மூத்த தலைவர் பொதுமேடையில் இவ்வளவு காட்டமாக பேசுகிறார் என்றால், அதற்கு பின்னால் மிக நீண்ட காலத் திட்டமிடல் இருக்கக்கூடும்..
புதுச்சேரி திமுக
புதுச்சேரியில் ஆட்சியைப் பறிகொடுத்த பிறகு காங்கிரஸ் அங்கு கிட்டத்தட்ட சிதைந்து போயுள்ள நிலையில், அந்த வெற்றிடத்தை தாங்களே நிரப்ப வேண்டும் என்ற முனைப்பு திமுகவிடம் அதிகரித்துள்ளது.. இது ஒருவகையில் காங்கிரஸைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளும் தந்திரமாகவும் இருக்கலாம்..
தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே, அதிக இடங்களைக் கோருவதற்கும், முக்கிய தொகுதிகளைத் தங்கள் வசம் வைத்துக்கொள்வதற்கும் திமுக ஒரு வலுவான அழுத்தத்தை இதன் மூலம் உருவாக்குகிறது..
காங்கிரஸ் தரப்பை பொறுத்தவரை, இது ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.. தேசிய அளவில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளது.. இந்தச் சூழலில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இவ்வாறு பேசுவது, காங்கிரஸ் தொண்டர்களிடையே சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தவே செய்யும்..
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை என்பது வெறும் பதிலடி மட்டுமல்ல; அது தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு போராட்டமாகும்.. திமுகவின் இந்த அதிரடிப் போக்கு, காங்கிரஸை பணியவைக்கும் ஒரு முயற்சியாகவே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது..
இந்த கூட்டணிப் பூசல் வரும் தேர்தல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.. ஒருவேளை திமுக தனது பிடியில் உறுதியாக இருந்தால், புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழலோ அல்லது மிகக் குறைந்த இடங்களைப் பெற வேண்டிய நிலையோ உருவாகலாம்..
கூட்டணிக்கு பின்னடைவு?
இது தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகத் தெரிந்தாலும், மாநில அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட திமுக துணிந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது..
கூட்டணிக்குள் நிலவும் இந்த நிழல் யுத்தம், வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையக்கூடும்.. தொகுதிப் பங்கீடு முடிவாகும் வரை இத்தகைய வார்த்தை போர்கள் தொடரத்தான் போகிறது.. இது இறுதியில் வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு தலைமை முடிவெடுத்தாலும், தற்போதைய இந்த மோதல் தொண்டர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியிருபபதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு











Click it and Unblock the Notifications