நடிகர் சூர்யாவிற்கு குவியும் ஆதரவு.. ட்வீட்டரில் டிரெண்டாகும் வைரல் ஹேஷ்டேக்.. பாமகவிற்கு எதிர்ப்பு!
சென்னை: நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக இணையத்தில் தற்போது #WeStandWithSuriya என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. தேசிய அளவில் இந்த டேக் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் தா. செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படம் அமேசான் பிரைமில் ஹிட் அடித்துள்ளது. தேசிய அளவில் இந்த படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
அதோடு ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்து தற்போதைய நிலவரப்படி ஹாலிவுட் படமான ஷாஷ்வாங் ரிடெம்ப்ஷன் படத்தையும் முந்தி உள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஜெய் பீம் படம் கவனம் ஈர்த்து இருக்கிறது.

கதை
இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர் என்று பல விஷயங்களை இந்த படம் பேசுகிறது. பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜ்கண்ணு, அவரின் மனைவி பார்வதி ஆகியோரின் நிஜ வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த கதை புனையப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கூட ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் பலரும் இதே படத்தை பாராட்டி இருந்தனர். ஆனால் பாமகவினர் பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவிற்கு 9 கேள்விகள் எழுப்பி இருந்தார்.

சூர்யா பதில்
இதற்கு சூர்யாவும் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த படத்தின் காட்சி ஒன்றில் இருக்கும் காலண்டர் குறிப்பிட்ட சமூகத்தை விமர்சனம் செய்வது போல இருப்பதாக பாமகவினரும், குறிப்பிட்ட சமூகத்தினரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இதனால் இணையத்தில் ஜெய் பீம் குறித்த பெரிய விவாதம் ஏற்பட்டது.

விவாதம்
இதையடுத்து நேற்று மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று பாமகவினர் போராட்டத்தால் இந்த படமும் நிறுத்தப்பட்டது.

படம் நிறுத்தம்
இந்த நிலையில்தான் சூர்யாவிற்கு ஆதரவாக இணையத்தில் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். சூர்யாவிற்கு ஆதரவாக இணையத்தில் தற்போது #WeStandWithSuriya என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. தேசிய அளவில் இந்த டேக் வைரலாகி வருகிறது. சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் பலர் ஒன்று கூடி ட்வீட் செய்து வருகிறார்கள். பாமகவிற்கு எதிராக பலர் இதில் ட்வீட் செய்துள்ளனர்.

வைரல்
சினிமா உலகினர் சூர்யாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துளள்னர். சூர்யாவை தாக்க வேண்டும் என்று பாமக மாவட்ட நிர்வாகம் விடுத்த மிரட்டலுக்கு எதிராக பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம் சினிமா டெக்னிஷியர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் அரசியல் அழுத்தத்திற்கு எதிராக சூர்யாவிற்கு துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications